பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மண்டபம் பேரூராட்சி வளர்ச்சி பணிகள் குறித்து கள ஆய்வு.

ராமநாதபுரம் மாவட்டம் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்கா கொரோனா பெரும் தொற்று காரணமாக கடந்த சில மாதங்களாக மூடப்பட்டது. கடற்கரை பூங்காவை பயன்பாட்டிற்கு உடனே கொண்டுவர ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அறிவுறுத்தினார். அதன்படி, சிவகங்கை மண்டல பேரூராட்சிகளின் உதவி இயக்குநர் மாடசாமி சுந்தர்ராஜ் , மண்டபம் கடற்கரை பூங்காவை பேரூராட்சி பொறியாளர் மற்றும் செயல் அலுவலருடன் கூட்டாய்வு செய்தார். மாவட்ட ஆட்சித் தலைவர் அறிவுரைகளின் படி புதுப்பொலிவுடன் மண்டபம் பேரூராட்சி கடற்கரை பூங்காவை பயன்பாட்டிற்கு கொண்டுவருவதற்கு மேற்கொள்ள வேண்டிய பராமரிப்பு பணிகள், புதிய விளையாட்டு உபகரணங்கள் கொள்முதல் செய்தல் குறித்து ஆய்வு மேற்கொண்டார். பழுதடைந்த கண்ணாடி இழைப் படகுகளை பழுது நீக்கம் செய்து லைப் ஜாக்கெட் உள்ளிட்ட பாதுகாப்பு உபகரண ஏற்பாடுகளுடன் சுற்றுலாப் பயணிகளின் பயன்பாட்டுக்கு கொண்டு வரவும், சுற்றுலா பயணிகளுக்கு தேவையான குடிநீர், கழிவறை வசதிகளை உடன் மேற்கொள்ளவும் செயல் அலுவலருக்கு அறிவுரை வழங்கினார். பேரூராட்சியில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் வளர்ச்சி திட்டப்பணிகள் மற்றும் திடக்கழிவு மேலாண் பணிகள், அனைவருக்கும் வீடு வழங்கும் திட்டம் உள்ளிட்ட பணிகளை ஆய்வு செய்தார். மண்டபம் பேரூராட்சி செயல் அலுவலர் இரா. இளவரசி, தொண்டி பேரூராட்சி தொகுப்பு இளநிலை பொறியாளர் சேவுகமூர்த்தி, பணி ஆய்வாளர் சிவகுமார், இளநிலை உதவியாளர் சு. முனியசாமி உள்ளிட்ட பேரூராட்சி பணியாளர்கள் உடன் இருந்தனர்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image