
மதுரை திருப்பரங்குன்றம் தாலுகாவிற்குட்பட்ட ஒத்த ஆலங்குளத்தில், அம்மா மினி கிளினிக் மதுரை வடக்கு சட்டமன்ற உறுப்பினர் ராஜன்செல்லப்பா குத்து விளக்கேற்றி திறந்து வைத்தார்..! நிகழ்ச்சியில் எம்ஜிஆர் இளைஞரணி செயலாளர் வக்கீல் ரமேஷ் மற்றும் ஒன்றிய செயலாளர் நிலையூர் முருகன் ஆகியோர் கலந்து கொண்டனர்..!சட்டமன்ற உறுப்பினர் தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசுகையில், அம்மா மினி கிளினிக் மக்களிடையே பெரும் வரவேற்பை ஏற்பட்டுள்ளதை தொடர்ந்து, மக்கள் அனைவரும் தங்களுடைய இடத்திற்கும் அம்மா மினி கிளினிக் வேண்டும் என கேட்பதாக கூறினார்..! தொடர்ந்து, அக்கோரிக்கையினை முதல்வரிடம் கொண்டு சென்றதை எடுத்து, மேலும் 1000 அம்மா மினி கிளினிக் திறந்து வைக்கப்படும் என தெரிவித்தார்..!
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்