மதுரையில் திமுக கட்சி பிரமுகர் மீது வழக்குப் பதிவு மற்றும் பா.ஜ.க., ஊடகப் பிரிவு செயலாளர் கைது.

மதுரை வீரபாண்டியை சேர்ந்தவர் மணிகண்டன், 40. இவர் மதுரை புறநகர் மாவட்ட பா.ஜ.க ஊடகப் பிரிவு செயலாளராக உள்ளார்.இவர் அப்பகுதி பொதுமக்களிடம் பணம் கேட்டு மிரட்டுவதாகவும், தர மறுப்பவர்கள் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் வழக்கு போடுவேன் என மிரட்டுவதாகவும் அப்பகுதியை சேர்ந்த 200-க்கும் மேற்பட்ட பொதுமக்கள் சில நாட்களுக்கு முன்பு மதுரை மாவட்ட எஸ்.பி., சுஜித்குமாரிடம் புகார் தெரிவித்தனர்.அதனைத்தொடர்ந்து மணிகண்டன் மீது வழக்குப் பதிவு செய்யும்படி எஸ்.பி., உத்தரவிட்டார்.இதனைத் தொடர்ந்து ஊமச்சிகுளம் போலீசார் மணிகண்டன், 40 மற்றும் அவரது மகன் ஆதித்யா, 20 ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்து மணிகண்டனை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள அவரது மகன் ஆதித்யாவை தேடிவருகின்றனர்.இந்த நிலையில் மணிகண்டன் மீது தொடர்ந்து பல்வேறு புகார்கள் கட்சி தலைமைக்கு சென்றதால் அவரை மாவட்ட ஊடகப்பிரிவு செயலாளர் பதவியிலிருந்து நீக்கி உள்ளதாக பா.ஜ.க., புறநகர் மாவட்ட தலைவர் மகா சுசீந்திரன், ஊடகப்பிரிவு புறநகர் மாவட்ட செயலாளர் தங்கவேல்சாமி ஆகியோர் அறிக்கை வெளியிட்டுள்ளனர்…( இதேபோன்று திமுக பகுதி செயலர் மீது வழக்கு பதிவுமதுரை மாவட்டம் அவனியாபுரத்தில் வீட்டில் இருந்தவரை அத்துமீறி வீட்டுக்குள் புகுந்து தாக்கிய திமுக பகுதி செயலர் உள்ளிட்ட நபர்கள் மீது போலிசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.அவனியாபுரம் பைபாஸ் சாலை மல்லிகை குடியிருப்பு பகுதியைச் சேர்ந்தவர் மணிகண்டன் (43). இவர் புதன்கிழமை வீட்டில் இருந்தபோது திமுக பகுதி செயலர் ஈஸ்வரன் மற்றும் சிலர் அத்துமீறி வீட்டிற்குள் புகுந்து மண்கண்டனை தாக்கியுள்ளனர். மேலும் தங்களது விளம்பர பேனர்களை சேதப்படுத்தினால் கொலை செய்து விடுவோம் என மிரட்டியுள்ளனர். இதுகுறித்து புகாரின்பேரில் அவனியாபுரம் போலீஸர் திமுக பகுதி செயலர் ஈஸ்வரன் உள்ளிட்ட சில நபர்கள் மீது வழக்குப்பதிவு தீவிர விசாரணை செய்து விசாரிக்கின்றனர். ஒரே நாளில் பாஜக பிரமுகர் கைது செய்யப்பட்டதும் மற்றும் திமுக பிரமுகர் மீது காவல்துறை வழக்குப் பதிவு செய்தது குறிப்பிடத்தக்கது.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image