நீதி கேட்டு சாலை மறியல்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகாக்கு உட்பட்ட திருப்புலாணி ஒன்றியம் தாதனேந்தல் கிராமத்தைச் சேர்ந்த. செல்வம் மகன் செந்தில்குமார் வயது 32 என்பவர். இவர் கோட்டைப்பட்டினம் விசைப்படகு துறைமுகத்தில் இருந்து கடந்த 18.1.2021 தேதி தங்கச்சிமடத்தை சேர்ந்த திருக்குடும்பம் மகன் ஆரோக்கிய சேசு வயது 50 என்பவருக்கு சொந்தமான INDTN10MM 0646 என்ற பதிவுஎண் கொண்ட விசைப்படகில் கடலுக்குள் மீன்பிடிக்கச் சென்றனர் செந்தில் குமார் உட்பட  தங்கச்சிமடம் அந்தோணி ராஜ் மகன் மெசியா வயது 30, வட்டவளம் உச்சபுளி வெள்ளைச்சாமி மகன் நாகராஜ் வயது52, மண்டபம் நேச பெருமாள் மகன் சாம் வயது 28, ஆகிய நான்கு மீனவர்களும் கடலுக்குள் மீன் பிடிக்கச் சென்றனர். மீன் பிடித்து விட்டு 19.01.21/10.30 மணிக்கு கரை திரும்ப வேண்டியவர்கள் கரைக்கு வரவில்லை. அந்த விசைப்படகை தேடி மூன்று விசைப்படகுகளில் 12 மீனவர்கள் சென்றுள்ளார்கள். அப்போதுதான் தெரிந்தது.

இந்த  நான்கு மீனவர்களையும் இலங்கை கடற்படை ரோந்து கப்பல் நடுக்கடலில் கைது செய்து சித்தரவதை செய்து படுகொலை செய்தது,  அதை கண்டித்து. உயிர் இழந்த மீனவர் செந்தில்குமாரின் உறவினர்கள் உரிய நீதி கேட்டு திருப்புலாணி அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர்.

அப்பொழுது சம்பவ இடத்திற்கு வந்த கீழக்கரை தாசில்தார் வீர ராஜா போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தியதில் கலைந்து சென்றனர்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image