நெல்லை தென்காசி மாவட்டங்களில் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு…

தமிழக தேர்தல் ஆணையம் சார்பில், தமிழகம் முழுவதும் இறுதி வாக்காளர் பட்டியல் ஜன.20 புதன்கிழமை வெளியிடப்பட்டது. அதன்படி தென்காசி,நெல்லை, மாவட்ட ஆட்சியர் அலுவலகங்களில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சியர்கள் வெளியிட்டனர்.நெல்லையில் மாவட்ட ஆட்சியர் விஷ்ணு தலைமை தாங்கி, இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட்டார். அதனை மாவட்ட வருவாய் அலுவலர் பெருமாள் பெற்றுக்கொண்டார். பின்னர் மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது: நெல்லை மாவட்டத்தில் நெல்லை, பாளையங்கோட்டை, அம்பை, நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகள் உள்ளன. இந்த 5 சட்டமன்ற தொகுதிகளில் 6 லட்சத்து 62 ஆயிரத்து 326 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 90 ஆயிரத்து 732 பெண் வாக்காளர்களும், 101 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 53 ஆயிரத்து 159 வாக்காளர்கள் உள்ளனர்.ஆண் வாக்காளர்களைவிட பெண் வாக்காளர்களே அதிகம் உள்ளனர். 18 முதல் 19 வயது நிரம்பிய வாக்காளர்கள் 27 ஆயிரத்து 205 பேர் உள்ளனர். 20 வயது மற்றும் அதற்கு மேல் உள்ள வாக்காளர்கள் 13 லட்சத்து 25 ஆயிரத்து 954 பேர் உள்ளனர். தொடர் முறை திருத்தம் மூலம் வரைவு வாக்காளர் பட்டியல், கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி வெளியிடப்பட்டது. இதில் 6 லட்சத்து 45 ஆயிரத்து 494 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 71 ஆயிரத்து 179 பெண் வாக்காளர்களும், 89 இதர வாக்காளர்களும் என மொத்தம் 13 லட்சத்து 16 ஆயிரத்து 762 பேர் இடம் பெற்றிருந்தனர்.கடந்த 1-ந்தேதியை தகுதி நாளாகக் கொண்டு, கடந்த நவம்பர் மாதம் 16-ந்தேதி முதல் டிசம்பர் மாதம் 15-ந்தேதி வரை சிறப்பு சுருக்கமுறை திருத்த முகாம் நடந்தது. கடந்த நவம்பர் மாதம் 21, 22 ஆகிய தேதிகளிலும், டிசம்பர் மாதம் 12, 13 ஆகிய தேதிகளிலும் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டன. மேலும் வாக்காளர்கள் பெயர் சேர்த்தல், நீக்கம் மற்றும் திருத்தம் தொடர்பாக நேரடியாகவும், இணையதளம் மூலமாகவும் விண்ணப்ப படிவங்கள் பெறப்பட்டன.இதில் புதிதாக ஆண் வாக்காளர்கள் 20 ஆயிரத்து 124 பேரும், பெண் வாக்காளர்கள் 22 ஆயிரத்து 626 பேரும், இதர வாக்காளர்கள் 12 பேரும் என மொத்தம் 42 ஆயிரத்து 762 வாக்காளர்கள் சேர்க்கப்பட்டனர். மேலும் இறந்தவர்கள் 5,254 பேரும், இரட்டை பதிவுகளுக்காக 213 வாக்காளர்களும் மற்றும் இடம் மாறிச் சென்ற 898 வாக்காளர்களும் என மொத்தம் 6 ஆயிரத்து 365 வாக்காளர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். 7,498 வாக்காளர்களின் பெயர் மற்றும் இதர திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்டன. 3,665 வாக்காளர்களின் முகவரி மாற்றம் செய்யப்பட்டது. வாக்காளர் பட்டியலில் புதிதாக இடம் பெற்றவர்களுக்கு வருகிற 25-ந்தேதி புகைப்படத்துடன் கூடிய அடையாள அட்டை வழங்கப்படும். தேர்தல் ஆணையம் அறிவித்த பிறகு புதிய வாக்காளர்கள் தங்களது பெயர்களை சேர்க்க விண்ணப்பிக்கலாம். வாக்காளர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப கூடுதல் வாக்குசாவடிகள் ஏற்படுத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.

தென்காசி மாவட்டத்தில் இறுதி வாக்காளர் பட்டியலை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீீ.சு. சமீரன் வெளியிட்டார். அதனை ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மரகதநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா ஆகியோர் பெற்றுக் கொண்டனர். தென்காசி மாவட்டத்தில் உள்ள தென்காசி, ஆலங்குளம், கடையநல்லூர், வாசுதேவநல்லூர், சங்கரன்கோவில் ஆகிய 5 சட்டமன்ற தொகுதிகளுக்கு கடந்த ஜனவரி 1-ந் தேதியை தகுதி நாளாக கொண்டு இறுதி வாக்காளர் பட்டியல் தயார் செய்யப்பட்டுள்ளது. இதனை மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீீ.சு. சமீரன் வெளியிட்டார். அதனை ஆட்சித் தலைவரின் நேர்முக உதவியாளர் கவிதா, மாவட்ட ஆதிதிராவிட நல அலுவலர் மரகதநாதன், மாவட்ட வழங்கல் அலுவலர் சுதா ஆகியோர் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வில் சங்கரன்கோவில் கோட்டாட்சித் தலைவர் முருக செல்வி மற்றும் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர். இறுதி வாக்காளர் பட்டியலில் சங்கரன்கோவில் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 22 ஆயிரத்து 739 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 30 ஆயிரத்து 195 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 5 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 52 ஆயிரத்து 939 வாக்காளர்கள் உள்ளனர்.வாசுதேவநல்லூர் (தனி) தொகுதியில் 1 லட்சத்து 18 ஆயிரத்து 227 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 22 ஆயிரத்து 101 பெண் வாக்காளர்களும், மூன்றாம் பாலினத்தவர் 39 பேரும் என மொத்தம் 2 லட்சத்து 40 ஆயிரத்து 367 வாக்காளர்கள் உள்ளனர். கடையநல்லூர் தொகுதியில் 1 லட்சத்து 43 ஆயிரத்து 484 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 45 ஆயிரத்து 416 பெண் வாக்காளர்களும், 9 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 2 லட்சத்து 88 ஆயிரத்து 950 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி தொகுதியில் 1 லட்சத்து 42 ஆயிரத்து 974 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 48 ஆயிரத்து 532 பெண் வாக்காளர்களும், 18 மூன்றாம் பாலினத்தவரும் மொத்தம் 2 லட்சத்து 91 ஆயிரத்து 524 வாக்காளர்கள் உள்ளனர். ஆலங்குளம் தொகுதியில் 1 லட்சத்து 26 ஆயிரத்து 116 ஆண் வாக்காளர்களும், 1 லட்சத்து 34 ஆயிரத்து 18 பெண் வாக்காளர்களும், 7 மூன்றாம் பாலினத்தவரும் மொத்தம் 2 லட்சத்து 60 ஆயிரத்து 141 வாக்காளர்கள் உள்ளனர். 5 சட்டமன்ற தொகுதிகளையும் சேர்த்து 6 லட்சத்து 53 ஆயிரத்து 540 ஆண் வாக்காளர்களும், 6 லட்சத்து 80 ஆயிரத்து 262 பெண் வாக்காளர்களும், 78 மூன்றாம் பாலினத்தவரும் என மொத்தம் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர். தென்காசி மாவட்டத்தில் மொத்தம் 1,504 வாக்குச்சாவடிகள் உள்ளன. இவை 740 இடங்களில் அமைந்துள்ளன. வாக்காளர் பட்டியல் வெளியிட்ட பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு. சமீரன் கூறியதாவது:தென்காசி மாவட்டத்தில் உள்ள 5 சட்டமன்ற தொகுதிகளுக்கான இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. கடந்த 16-11 -2020 அன்று வெளியிட்ட வாக்காளர் பட்டியலில் மொத்தம் 12 லட்சத்து 91 ஆயிரத்து 681 வாக்காளர்கள் இருந்தனர். தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி பட்டியலில் 13 லட்சத்து 33 ஆயிரத்து 880 வாக்காளர்கள் உள்ளனர். வாக்காளர்களுக்கு சிறப்பு முகாம்கள் நான்கு முறை நடத்தப்பட்டது. இதில் பெயர் சேர்த்தல், நீக்கல், திருத்தம் போன்ற பணிகளுக்காக 60 ஆயிரத்து 54 மனுக்கள் பெறப்பட்டு இந்த பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புதிதாக சேர்க்கப்பட்ட பட்டியலில் இளைஞர்கள் அதிக ஆர்வத்துடன் சேர்ந்துள்ளனர். இவ்வாறு மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கீ.சு. சமீரன் கூறினார்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image