திடீரென்று பூமிக்கு புதைந்த இரண்டு மாடி வீடு மதுரையில் பரபரப்பு.

மதுரை தெற்கு வெளி வீதி பகுதி சேர்ந்த ஜெயபால் 67..என்பவர் அதே பகுதியில் டீக்கடை நடத்தி வருகிறார் இவருக்கு சொந்தமான இரண்டு மாடி அடுக்கு கொண்ட வீடு ஒன்று தெற்கு வெளி வீதி மீனாட்சி தியேட்டர் அருகே காஜா தெருவில் இரண்டு மாடி அடுக்கு கொண்ட கட்டிடம் 1995 ல் கட்டப்பட்டது. முதல் தளத்தில் தளத்தில் தல இரண்டு குடும்பங்கள் இரண்டாவது தளத்தில் மாடியில் ஒரு குடும்பங்களும் வாடகைக்கு வசித்து வருகின்றனர். நேற்று பகல் ஒரு மணி அளவில் திடீரென சரிய ஆரம்பித்தது சுதாரித்துக்கொண்ட குடியிருந்தவர்கள் உடனடியாக வெளியேறி காயமின்றி உயிர் தப்பினர் சம்பவம் குறித்து தகவல் அறிந்த மதுரை டவுன் தீயணைப்பு நிலைய அலுவலர் வெங்கடேசன் அளவிலான தீயணைப்பு மற்றும் பேரிடர் மீட்பு குழுவினர் உள்ளே வேறு யாரும் சிக்கி உள்ளார்களா என ஆய்வு செய்தனர்… மேலும் கட்டிடம் வலுவிழந்தது காரணத்தால் புதை கொண்டதா அல்லது வேறு காரணமா உண்டா என தெற்கு வாசல் போலீசார் விசாரணை செய்து வருகின்றனர் இந்தநிலையில் 25 ஆண்டுகள் ஆன கட்டிடம் இடிந்தது அதிகாரிகளை அதிர்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. எனவே மதுரையில் உள்ள பழமையான கட்டடங்களை உறுதித்தன்மையை குதித்து ஆய்வு செய்வது காலத்தின் கட்டாயம் என உடனடியாக மாநகராட்சி மற்றும் தீயணைப்பு துறை இணைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image