பாவூர்சத்திரம் அருகே ரயில் நிலையத்தில் முன்பதிவு மையம் சரிவர இயங்காததால் பொதுமக்கள் அவதி…

தென்காசி அருகே உள்ள பாவூர்சத்திரம் மற்றும் கீழ கடையம் ரயில் நிலையங்களுக்கு இடையே அமைந்துள்ளது மேட்டூர் ரயில் நிலையம். மேட்டூர், அரியப்புரம், ஆவுடையானூர், புலவனூர், மயிலப்புரம் சுற்று வட்டார கிராமங்களை சார்ந்த பொதுமக்கள் இந்த ரயில் நிலைய முன்பதிவு மையத்தை பயன்படுத்தி வந்தனர்.இந்நிலையில் கடந்த இரு தினங்களாக பி.எஸ்.என்.எல் இணைப்பில் பிரச்சனை காரணமாக தட்கல் முறையில் ரயில் முன்பதிவு செய்ய முடியாமல் மக்கள் ஏமாற்றமடைந்துள்ளனர்.பொதுமக்கள் சார்பில் அதிகாரிகளுக்கு புகார் அனுப்பப்பட்டுள்ளது. இது குறித்து அதிகாரிகள் தரப்பில்,
பி.எஸ்.என்.எல் இணைப்பில் பிரச்சனை உள்ளதால் தட்கல் முறையில் ரயில் பயணச்சீட்டு முன்பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுகிறது. சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளதாக தகவல் தரப்பட்டுள்ளது. மேலும் திருநெல்வேலி எம்பிக்கும் பொதுமக்கள் கோரிக்கை வைத்துள்ளனர். பொங்கல் பண்டிகையை கொண்டாடி விட்டு சென்னை, பெங்களூரு, கோவை மற்றும் பல்வேறு நகரங்களுக்கு செல்வதற்கு ரயில் பயணத்தையே பொதுமக்கள் நம்பியுள்ளனர். எனவே இந்த பிரச்சனையை உடனடியாக சரி செய்து, இந்த தட்கல் பயணச்சீட்டு முன்பதிவு பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வர வேண்டும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பாக உள்ளது.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image