Home செய்திகள் ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் திருடு போன நகைகள் மீட்ட போலீசாருக்கு எஸ்பி பாராட்டு .

ராமநாதபுரத்தில் பல்வேறு இடங்களில் திருடு போன நகைகள் மீட்ட போலீசாருக்கு எஸ்பி பாராட்டு .

by mohan

ராமநாதபுரம் மாவட்டம், கோவிலாங்குளம் மற்றும் ஆர்.எஸ். மங்கலம் காவல் நிலைய சரகங்களில் பல்வேறு குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட பாண்டி பிரசாத் (30), திலீப் குமார் (23) மற்றும் சூசைமாணிக்கம் (50) ஆகிய 3 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு, அவர்களிடமிருந்து 13 பவுன் தங்க நகைகள், லேப்டாப், ரூ.36,000 மற்றும் இரு சக்கர வாகனம்-1 ஆகியவை கைப்பற்றப்பட்டு, உரிய நபர்களிடம் ஒப்படைக்கப்பட்டது. ஆர்.எஸ்.மங்கலம் காவல் நிலைய சரகத்தில், 2 வீடுகள் மற்றும் பள்ளிக்கூடம் ஆகிய இடங்களில் நடந்த திருட்டு சம்பவம் தொடர்பாக, திருவாடானை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்க பெருமாள் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட அழியாதான்மொழி கிராமத்தை சேர்ந்த சூசைமாணிக்கம் மகன் திலீப் குமார், சந்தியாகு மகன் சூசைமாணிக்கம் ஆகியோரை கைது செய்து, அவர்களிடமிருந்து லேப்டாப்-1, ரூ.36,000 பஜாஜ் பல்சர் இருசக்கர வாகனம் ஆகியவை மீட்கப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட மேற்படி 2 எதிரிகள் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். கோவிலாங்குளம் காவல் நிலையம் மேலவில்லனேந்தல் கிராமத்தை சேர்ந்த முத்து இருளாயி என்ற மூதாட்டி வீட்டில் 13 பவுன் தங்க நகைகள் திருடுபோனது சம்பந்தமாக கமுதி உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சகாதேவன் தலைமையிலான போலீசார் தீவிரமாக விசாரணை செய்து, சம்பவத்தில் ஈடுபட்ட மதுரை, யாகப்பா நகர், மாரிமுத்து (எ) ராஜகோபால் மகன் பாண்டி பிரசாத் என்பவரை கைது செய்து, அவரிடமிருந்து 13 பவுன் களவு சொத்துக்களை மீட்கப்பட்டு, வழக்கில் சம்பந்தப்பட்ட எதிரி மேற்படி பாண்டி பிரசாத் என்பவர் நீதிமன்ற காவலில் அடைக்கப்பட்டுள்ளார். முதுகுளத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா மு.ரவி, காவல் ஆய்வாளர் மோகன் தலைமையிலான போலீசார் கீரனூர் பஸ் ஸ்டாப் அருகே 16.1.2021ல் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தபோது, சந்தேகத்திற்கிடமாக மூடைகளுடன் நின்றிருந்த போகலூர் இராமைய்யா மகன் குமார், பரமக்குடி தங்கராஜ் மகன் மோகன் தாஸ் மற்றும் வீரசோழன் முகமது அபுபக்கர் மகன் அப்துல் ரகுமான் ஆகியோரை பிடித்து விசாரணை செய்து அவர்களை கைது செய்தும், அவர்களிடமிருந்து சுமார் 150 கிலோ குட்கா பாக்கெட்டுகள் கைப்பற்றப்பட்டு, முதுகுளத்தூர் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டு, விசாரணையில் இருந்து வருகிறது. குற்றச்சம்பவங்களில் ஈடுபட்ட குற்றவாளிகளை திறமையாக துப்பு துலக்கி, 13 சவரன் தங்க நகைகள், லேப்டாப், ரூ.36,000இரு சக்கர வாகனம்-1 மற்றும் 150 கிலோ குட்கா பொருட்கள் ஆகியவற்றை கைப்பற்றிய, முதுகுளத்தூர் உட்கோட்ட காவல் துணை கண்காணிப்பாளர் ராகவேந்திரா மு.ரவி, திருவாடானை உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சிவலிங்க பெருமாள் மற்றும் கமுதி உட்கோட்ட குற்றப்பிரிவு சார்பு ஆய்வாளர் சகாதேவன் ஆகியோர் தலைமையிலான தனிப்படையினரை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் இ.கார்த்திக் வெகுவாக பாராட்டினார்.

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!