மின்சாரம் தாக்கி உயிரிழந்தவரின் குடும்பத்திற்கு 10 லட்சம் நிவாரணம்;அமைச்சர் வழங்கினார்…

தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட கள்ளிக்குளம் கிராமத்தை சேர்ந்தவர் விஜயலட்சுமி. இவரின் சகோதரர் விஜயராஜ் என்பவரும் உடன் வசித்து வருகிறார். சம்பவத்தன்று காலை மாடுகளுக்கு புல் அறுக்கச் சென்ற போது மக்காச்சோளம் காட்டில் மின்கம்பம் வயர் அறுந்து கிடந்துள்ளது. கவனிக்காமல் அதில் மிதித்த விஜயராஜ் மின்சாரம் தாக்கி இறந்துள்ளார். வெகு நேரமாகியும் தம்பியை காணவில்லை என்று விஜயலட்சுமி புஞ்சைக்கு தேடி பார்க்கச் சென்றபோது தம்பி மேல் கிடந்த மின்கம்பியை எடுத்தபோது இவர் மேலும் மின்சாரம் தாக்கி இறந்துவிட்டார். சம்பவம் பற்றி அறிந்து வருவாய்த் துறைக்கு தகவல் அறிந்து விரைந்து நடவடிக்கை எடுக்க சங்கரன்கோவில் சட்ட மன்ற உறுப்பினர் ஆதிதிராவிட நலத்துறை மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சருமான வி.எம்.ராஜலட்சுமி கள்ளிக்குளத்திற்கு நேரில் சென்று முதல்வரின் நிவாரண நிதியிலிருந்து 10 லட்சம் ரூபாய்க்கான காசோலையை இறந்த விஜயலட்சுமியின் மகள்கள் கௌசல்யா, சாரதா, தனலட்சுமி ஆகியோருக்கு வழங்கினார். அப்போது தென்காசி மாவட்ட ஆட்சித்தலைவர் சமீரன் ஐஎஎஸ் மற்றும் கடையநல்லூர் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் சுப்பையா பாண்டியன், ஒன்றிய பேரவை செயலாளர் ஜெகதீசன், மற்றும் அதிகாரிகள் அதிமுக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image