
மதுரை ஜல்லிக்கட்டு பாதுகாப்பு பணிக்கு வந்து இருந்த போலீஸ் ஜீப் மீது கல்வீசி கண்ணாடியை உடைத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அனைத்து மகளிர் காவல் ஆய்வாளர் சித்திரைச் செல்வி இவர் பாலமேட்டில் நடந்த ஜல்லிக்கட்டுபோட்டிக்கு பாதுகாப்பு பணிக்காக வந்து இருந்தார் .அப்போது அவர் வந்த ஜுப் பாலமேடுகீழத் தெருவில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.அந்த ஜீப்பின்மீது கல் வீசி அதன் கண்ணாடியைஉடைத்து உடைத்து விட்டனர் .இந்த சம்பவம் தொடர்பாக இன்ஸ்பெக்டர் சித்திரை செல்வி பாலமேடு போலீசில் புகார் செய்தார் .போலீசார் வழக்குப்பதிவு செய்து பாலமேடு கீழத் தெருவை சேர்ந்த சங்கர்மகன்கருப்பசாமி என்ற அருணாச்சலம் 23 என்ற வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்