
மதுரை முக கவசம் அணிந்து வர சொன்னதால் தியேட்டர் காவலாளி மீது தாக்குதல் நடத்திய ஐந்து பேரை போலீசார் கைது செய்தனர்.மதுரை பைபாஸ் ரோட்டில் உள்ள தியேட்டர் ஒன்றில் காவலாளியாக கதிரேசன் என்பவர் வேலை செய்து வருகிறார் .நேற்று தியேட்டருக்கு படம் பார்க்க வந்த சிலரை அவர் முக கவசம் அணிந்து வரச் சொல்லி தடுத்துள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த 5 பேர் காவலாளியைதரக்குறைவாக பேசியதோடு மட்டுல்லாமல் அவரை தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக தியேட்டர் சூப்பர்வைசர் அலெக்ஸ் பாண்டியன் கொடுத்த புகாரின் பேரில் கரிமேடு போலீசார் வழக்கு பதிவு செய்துபெத்தானியாபுரம் கோமஸ்தெரு மைக்கேல் ராஜ் 24 அதே பகுதியைச் சேர்ந்த அருள்ராஜ் 22 நிலக்கோட்டையைச் சேர்ந்த கில்பர்ட்ஐசக்20 கோமஸ்தெருவைச்சேர்ந்தசேவியர் ஸ்டீவாக் 20 பிரிட்டோ தெருவைச்சேர்ந்த டொமினிக்சிரில்20
ஆகிய 5 பேரையும் கைது செய்தனர்.*******மதுரை வண்டியூரில் வாலிபரை தாக்கிய 2 பேர் கைதுமதுரை வண்டியூரில் நண்பருடன்பேசிக்கொண்டிருந்த வாலிபரை தாக்கிய 2 பேர் கைது.மதுரை திடீர்நகர் பாஸ்கரதாஸ் நகரை சேர்ந்தவர் ராமச்சந்திரன் 28 .இவர்சௌராஷ்டிரம் சதாசிவ நகரில் நண்பருடன் பேசிக்கொண்டிருந்த போது அந்த வழியாக வந்த வண்டியூர் புகழேந்தி நகரை சேர்ந்த பாண்டி மகன் மணிகண்டன் என்ற வட்டி மணி 19 மற்றும் தென் குமரன் மகன் கணேசமூர்த்தி 19 ஆகிய இருவரும் பாலச்சந்திரனை அவதூறாக பேசி தாக்கியுள்ளனர் .இந்த சம்பவம் தொடர்பாக பாலராமச்சந்திரன் அண்ணாநகர் போலீசில் புகார் செய்தார்.போலீசார் வழக்கு பதிவு செய்து மணிகண்டன் மற்றும் கணேசமூர்த்தியை கைது செய்தனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்