
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் குருவையாராஜா தெருவை சேர்ந்தவர் ஜனார்த்தன ராஜா (வயது 65 )பல ஆண்டுகளுக்கு முன்பே கோயம்புத்தூர் பகுதியில் நிரந்தரமாக குடியேறியுள்ளார் வெளிநாட்டில் வேலை பார்த்து வந்துள்ளார் கொரோனா காலத்தில் கோயம்புத்தூரில் உள்ள வீட்டுக்கு வந்துள்ளார்.இந்த நிலையில் நேற்று இராஜபாளையத்தில் குருபையா ராஜா தெருவில் உள்ள உறவினர்கள் வீட்டுக்கு ஜனார்ந்தன ராஜா இவரது மனைவி கலாவதி (வயது 45 )இவரது மகன் சித்தார்த் (17வயது )இவர்கள் 3 பேரும் உறவினர் வீட்டுக்கு வந்த நிலையில் இராஜபாளையம் மருத்துவமனை ரோட்டில் உள்ள தனியார் தங்கும் விடுதியில் அறை எடுத்து தங்கி உள்ளனர்.இதில் 3 பேரும் விஷம் அருந்தியது விடுதி ஊழியர்களுக்கு தெரிய வந்ததை அடுத்து மூன்று பேரையும் காப்பாற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயற்சி செய்துள்ளனர் சிறுவன் சித்தார்த் விடுதியிலே உயிரிழந்ததுள்ளது தெரிய வந்துள்ளது ஜனார்த்தனா மற்றும் இவரது மனைவி கலாவதி இருவரையும் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கலாவதி உயிரிழந்தார் ஜனார்த்தன ராஜா இராஜபாளையம் அரசு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளார் மூன்று பேர் உயிரிழந்தது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.ராஜபாளையம் பகுதியில் உறவினர்கள் இருக்கும் நிலையில் இவர்கள் ஏன் ஓட்டலில் ரூம் எடுத்து தங்கி உள்ளனர் தற்கொலைக்கான காரணம் என்ன என்பது குறித்து இராஜபாளையம் வடக்கு காவல் நிலைய போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
செய்தியாளர் வி காளமேகம்