Home செய்திகள் ராமநாதபுரத்தில் 1, 565 மாணவ, மாணவிருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

ராமநாதபுரத்தில் 1, 565 மாணவ, மாணவிருக்கு விலையில்லா மிதிவண்டிகள்

by mohan

பிளஸ் 1 மாணவ, மாணவிகளுக்கு தமிழக பள்ளிக் கல்வித் துறை சார்பில், இலவச மிதிவண்டிகள் வழங்கும் நிகழ்ச்சி இராமநாதபுரம் செய்யது அம்மாள் மேல்நிலைப்பள்ளியில் நடந்தது. ராமநாதபுரம் சட்டமன்றத் தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சார்ந்த 1,565 மாணவ,மாணவியருக்கு அரசின் விலையில்லா மிதிவண்டிகளை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், இராமநாதபுரம் சட்டமன்ற உறுப்பினர் டாக்டர் எம்.மணிகண்டன் ஆகியோர் வழங்கினர். இராமநாதபுரம் மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா மிதிவண்டிகள் வழங்கும் திட்டத்தின் கீழ் 2011-12 முதல் 2019-20 வரை 1,57,659 மாணவ, மாணவியர் பயனடைந்துள்ளனர். நடப்பு கல்வி ஆண்டில் (2020-21) மாவட்டத்தில் பிளல் 1 5034 மாணவர்கள், 5896 மாணவியர் என 10,930 பேருக்கு ரூ.4.31கோடி மதிப்பில் விலையில்லா மிதிவண்டிகள் வழங்க திட்டமிடப்பட்டுள்ளது. முதற்கட்டமாக இராமநாதபுரம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட 7 பள்ளிகளைச் சேர்ந்த 1,565மாணவ, மாணவியருக்கு விலையில்லா மிதிவண்டிகள் வழங்கப்பட்டுள்ளது. முதன்மைக் கல்வி அலுவலர் எஸ்.சத்தியமூர்த்தி, மாவட்டக் கல்வி அலுவலர்கள் கோ.முத்துச்சாமி, சோ.கருணாநிதி, பள்ளிகளின் தலைமையாசிரியர்கள் உட்பட அரசு அலுவலர்கள், மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!