தென்காசி-நெல்லை சாலையை சீரமைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் அமைச்சரிடம் கோரிக்கை…

தென்காசி-நெல்லை பிரதான சாலை சேதமடைந்து பயணிகளுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் வகையில் உள்ளதால் அதனை சீரமைக்க அரசியல் கட்சிகள்,பொதுநல அமைப்புகள்,சமூக ஆர்வலர்கள் தொடர்ந்து கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் தென்காசி,ஆலங்குளம்,திருநெல்வேலி பிரதான சாலையை சீரமைத்திட தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு சார்பில் தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சரிடம் (13.01.21) புதன் கிழமை கோரிக்கை மனு அளிக்கப்பட்டது.அதில், தென்காசி- திருநெல்வேலி செல்லும் சாலை (SH39) மிகவும் பிரதான சாலையாகும். தூத்துக்குடி துறைமுகத்தையும், கேரள மாநிலம் கொல்லத்தையும் இணைக்கும் முக்கிய சாலையாகும். இந்த சாலையின் இருபுறமும் சுமார் 200-க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. வணிகம் மற்றும் மக்கள் போக்குவரத்து மிகுந்தது. மேலும் கேரளாவிற்கு செல்லும் பிரதான சாலையாக இருப்பதால் லாரிகள் போக்குவரத்து மிகுதியாக உள்ளது. முக்கியத்துவம் வாய்ந்த இந்த சாலை கடந்த நவம்பர் மாதம் பெய்த மழையினால் மிகவும் சேதமடைந்து போக்குவரத்துக்கு மிகவும் ஆபத்தான நிலையில் உள்ளது.இதில் பயணிப்பவர்களின் நிலையும் ஆபத்தை எதிர்நோக்கும் வகையில் உள்ளது.மேலும் இந்த சாலை வழியாக செல்லும் வாகனங்கள் அடிக்கடி விபத்துக்குள்ளாகி வருகின்றன. விரைந்து செல்லும் அவசர ஊர்திகள் கூட செல்ல முடியாத அவல நிலை உள்ளது. ஆகவே போர்க்கால அடிப்படையில் இந்த சாலையினை புதிதாக அமைத்து தருமாறு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தென்காசி மாவட்டம் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. இந்த மனுவை தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பின் தென்காசி மாவட்ட தலைவர் T.P.V.வைகுண்டராஜா தகவல் மற்றும் செய்தித்துறை அமைச்சர் கடம்பூர் ராஜூ விடம் அளித்தார். அப்போது மாவட்ட செயலாளர் V.கணேசன், மாவட்ட பொருளாளர் IVN.கலைவாணன், தொழில் அதிபர் V.விபின், செய்தி தொடர்பாளர் A.இம்மானுவேல் ராஜன் ஆகியோர் உடனிருந்தனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்தி

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply