உசிலம்பட்டியில் தைப்பொங்கலையொட்டி 1கிலோ மல்லிலைப்பூ ரூ4000 விற்பனை.

உசிலம்பட்டியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி பூக்களின் விலை இருமடங்கு உயர்ந்து 1கிலோ மல்லிலைப்பூ ரூ4000 விற்பனையாகிறது. தமிழகம் முழுவதும் நாளை தமிழர்கள் கொண்டாடக்கூடிய விழாவான தைப்பொங்கல் திருநாள் கொண்டாடப்படவுள்ளது. தைப்பொங்கல் திருநாளில் கரும்பு, பூக்கள், பூசணிக்காய், மஞ்சள் உள்ளிட்ட பொருட்கள் முக்கிய பங்கு வகிக்கிறது. இதனால் பொங்கல் திருநாளில் பூக்கள், கரும்புகளின் விலை இருமடங்காக உயரும்.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி பகுதியில் தைப்பொங்கல் திருநாளையொட்டி பூ சந்தையில் பூக்களின் விலை இரு மடங்காக உயர்ந்துள்ளதால் பொதுமக்களும், சிறு குறு வியாபாரிகளும் கவலை அடைந்துள்ளனர். மேலும் உசிலம்பட்டி பகுதியில் பனிப்பொழிவு அதிகம் என்பதாலும், கடந்த 10நாட்களுக்கு மேலாக தொடர் மழை பெய்து வருவதாலும் மல்லிகைப் பூ வரத்து மிகவும் குறைந்துள்ளது. இதனால் பூ சந்தைக்கு மல்லிகை வரத்து குறைந்துள்ளது. இதனால் 1கிலோ மல்லிகைப்பூ 4000ரூபாய்க்கு விற்பனையாகிறது. அதே போல் பிச்சி 1கிலோ 1000ரூபாய்க்கும், கிலோவிற்கு சென்டுப்பூ 250ரூபாய்க்கும், கனகாம்பிரை 2500ரூபாய்க்கும், ரோஜா 500ருபாய்க்கும் முல்லை 2500ரூபாய்க்கும் விற்பனையாகிறது.அதே போல் தைப்பொங்கலையொட்டி கடந்த வருடம் 1கட்டு கரும்பு 450ரூபாய்க்கு விற்பனையான நிலையில் இந்த வருடம் தொடர் மழையால் 250ரூபாய்க்கு விற்பனை செய்தால் கூட கரும்புகள் விற்பனை நடைபெறவில்லை என கரும்பு வியாபரிகள் கவலை தெரிவிக்கின்றனர். மேலும் 5கிலோ வரை உள்ள ஒரு பூசணிக்காய் 200ரூபாய்க்கும், ஒரு வாழைத்தார் ரூ500க்கும், விற்பனையாகிறது. கொரோனா காலகட்டத்தில் பொதுமக்கள் வேலையிழந்துள்ள நிலையில் விலையேற்றத்தினால் பொதுமக்கள் கவலை அடைந்துள்ளனர்.

உசிலை சிந்தனியா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..