விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர்அலுவலகத்தில் ராகுல் காந்தியை வரவேற்க ஆலோசனைக்கூட்டம் நடைபெற்றது .

மதுரையில் வருகிற ஜனவரி 14-ஆம் தேதி நடைபெற இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு பார்வையிட வரும் காங்கிரஸ் கட்சி தலைவர் ராகுல் காந்திக்கு கொடுக்கப்படும் வரவேற்பு குறித்த ஆலோசனைக்கூடத்தில் விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கத்தாகூர் கலந்து கொண்டார்.பின்னர் செய்தியாளர்களை சந்தித்து கூறியதாவது:-உழவர் திருநாள் அன்று முதல் முறையாக இந்தியாவின் ஒரு தலைவர் மதுரை நடைபெற இருக்கும் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு காண வருவது மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது. குறைந்த காலகட்டத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தியை வரவேற்க சிறப்பான முறையில் செயல்பட்டுக் கொண்டிருக்கிறோம்.தேசிய கட்சிகள் குறித்து கேபி முனுசாமி அவர்கள் கோரியது குறித்த கேள்விக்கு:தமிழகத்தின் தலைவிதி திணை நிர்ணயிக்கக்கூடிய கட்சிகளாக தேசிய கட்சிகள் விளங்கியதற்கு சான்றிதழ் இருக்கிறது.அதிமுக, திமுக ஆட்சியில் காங்கிரஸின் பங்களிப்பு இல்லாமல் ஆட்சி நடந்தது இல்லை என்பது தெரிந்தும் தெரியாமல் கே.பி முனுசாமி நடந்து கொள்வது அவளுடைய சூழ் நிலையை காட்டுகிறது.கொரோனா தடுப்பு மருந்துக்கு 200 ரூபாய் விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது குறித்த கேள்விக்கு:கொரோனா தடுப்பு ஊசி முழுமையான பரிசோதனை முடியாத நிலையில் இதை வைத்து பணம் சம்பாதிக்க நினைத்திட கூடாது என்பதே என்னுடைய கருத்து.எம்பி கார்த்திக் சிதம்பரம் அவர்களின் ட்வீட் குறித்த கேள்விக்கு:உழைக்கின்ற காங்கிரஸ் தொண்டர்கள் பொறுத்தவரை தெரியும் வலியும் பதவியும் பொறுப்பின் பெருமையும் அப்பாவின் வழியில் வந்தவர்க்கு அதைப் பற்றி தெரியாது. இதனை தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி கண்டித்துள்ளது.வேளாண் சட்டங்களுக்கும் நிரந்தர தீர்வு காண்பது குறித்த கேள்விக்கு:விவசாயிகளுக்கு எதிரான சட்டங்களை நிறைவேற்ற இந்த அரசு மக்களை விவசாயிகளையும் அல்லது பாராளுமன்ற உறுப்பினர்களோ கேட்காமல் கார்ப்பரேட் நிறுவனங்களிடம் கேட்டு சட்டம் கொண்டு வந்துள்ளனர் இதன் விளைவு மிகவும் கொடுமையாக விவசாயிகளை பாதித்துள்ளது என்பது அனைவருக்கும் தெரியும்.நீதிமன்றம் சொல்கின்ற நிலை இருக்க வேண்டும் இல்லை என்று சட்டத்தை வாபஸ் செய்ய வேண்டும்.உண்மைக்கும் ஊழலுக்கும் நடக்கின்ற தேர்தலில் நின்ற கமலஹாசன் கருத்து குறித்த கேள்விக்கு:மிகச்சிறிய அளவில் கொள்ளை அடிக்கின்ற அரசியல் அதிமுக ஊழல் அரசுவீட்டுக்கு அனுப்புவது காங்கிரசின் நிலைப்பாடு இததைதான் கமலஹாசன் சொல்லியுள்ளார். மதச்சார்பற்ற கூட்டணியுடன் சேர்ந்து கமல்ஹாசன் அவர்கள் பணியாற்ற வேண்டும்.ஊழல் பற்றி பலமுறை மத்திய அரசுக்கு கடிதம் அளித்துள்ளோம் ஆனால்ஆர்எஸ்எஸ் கட்டுப்பாட்டில் இயங்கி வரும் மத்திய அரசு ஒருமையுடன் செயல்பட்டு வருகிறது.திமுக கூட்டணியில் காங்கிரஸ் இல்லை என்று L.முருகன் கூறியது குறித்த கேள்விக்கு:
பாஜக தலைவர் எல். முருகன் இப்போதுதான் தமிழக அரசைப் பற்றி தெரிந்து வருகிறார் யாருக்கு இடமுள்ளது ,யாருக்கும் இடமில்லை என்பது பற்றி மிக விரைவில் தேர்தலில் தெரியவரும் இவ்வாறு அவர் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image

Be the first to comment

Leave a Reply