அமையப்புரம் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் முன்பு சாலை சீரமைக்க கோரி மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் சமையல் செய்யும் போராட்டம்.

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே உள்ள செட்டியார்பட்டி பேரூராட்சிக்கு உட்பட்ட அம்மையபுரம் பகுதியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் மற்றும் இருபதுக்கு மேற்பட்ட நவீன அரிசி ஆலைகள் 500க்கும் மேற்பட்ட குடியிருப்பு பகுதிகள் உள்ளன.இந்த சாலைகள் குண்டும் குழியுமாக மிகவும் மோசமான நிலையில் உள்ளதை கடந்து தான் இப்பகுதி மக்கள் செட்டியார்பட்டி பகுதிக்கு வரும் சூழ்நிலை உள்ளது. கடந்த 5 ஆண்டுகளாக இந்த சாலையை சீரமைக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பேரூராட்சி நிர்வாகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகம் மற்றும் சட்டமன்ற உறுப்பினர், வட்டாட்சியரிடம் மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கை எடுக்காததை கண்டித்து இன்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் சாலையில் சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டனர். சமையல் செய்யும் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. அரசு மருத்துவமனை முன்பு நடந்த இந்த போராட்டத்தால் அப்பகுதியில் கடந்து வரக்கூடிய கர்ப்பிணி பெண்கள் மற்றும் வாகன ஓட்டிகள் இந்த போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்தனர். குறிப்பாக கர்ப்பிணிப் பெண்களின் சாலையை கடந்து வருவது மிகவும் சிரமமாக உள்ளது. எனவே அரசு உடனடியாக சாலையை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் சார்பில் கோரிக்கை வைக்கப்பட்டது.

செய்தியாளர் வி காளமேகம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..