Home செய்திகள் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்யினை நிரப்ப வேண்டும் என்றுசட்டமன்ற உறுப்பினர் . விவசாயிகள் கோரிக்கை

குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்யினை நிரப்ப வேண்டும் என்றுசட்டமன்ற உறுப்பினர் . விவசாயிகள் கோரிக்கை

by mohan

நிலக்கோட்டை ஒன்றியத்துக்கு உட்பட்ட நூத்துலாபுரம் ஊராட்சியில் சீத்தாபுரம் பாப்பன்குளம் கண்மாய்க்கும், குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய்க்கும் கடந்த சில நாட்களாக பெரும்பாறை பகுதியில் பெய்யும் மழை நீர் ஒன்றுசேர்ந்து குடகனூற்றின் ஒரு பகுதியான மேற்கு தொடர்ச்சி மலையின் கிடைக்கப்பெற்ற மழைநீரும் ராஜ வாய்க்கால் மூலமாக வருடம்தோறும் கிடைக்கப்பெற்று அதன்மூலமாக சீத்தாபுரம் பாப்பன்குளம் நிரம்புவது வழக்கம் ஆனால் கடந்த 12 ஆண்டுகளுக்கு முன்பு நிரம்பிய சிதம்பரம் பாப்பன்குளம் கம்மாய் தற்போது பெய்து வரும் மழையின் காரணமாக கடந்த 2 நாட்களாக கண்மாய் நிரம்பி மறுகால் பாய்ந்து செல்கிறது. இவ்வாறு பாய்ந்து செல்லும் நீரை நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகர் தலைமையில் அ.தி.மு.க.வினர் சீத்தாபுரம் கண்மாய் பகுதிக்கு சென்று மறுகால் பகுதியில் நின்று மலர் தூவி வரவேற்பு அளித்தனர். அப்போது அப்பகுதியில் இருந்த என். கோயில்பட்டி , நூத்துலாபுரம், மீனாட்சிபுரம் உள்ளிட்ட பகுதி விவசாயிகள் குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாயை நிரப்ப நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறி கோரிக்கை விடுத்து அப்பகுதி விவசாயிகள் நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ்.தேன்மொழி சேகரிடம் கூறி வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதற்கு உடனடியாக நிலக்கோட்டை சட்டமன்ற உறுப்பினர் எஸ் . தேன்மொழி சேகர் கூறியதாவது: தற்போது மாவட்ட கலெக்டரின் அனுமதியோடு தான் சீத்தாபுரம், குளத்துப்பட்டி உள்ளிட்ட கண்மாய்களான பாப்பன்குளம், பா பெரியகுளம் நிரப்ப நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு அதன் விளைவாக தற்போது சீத்தாபுரம் கம்மாய் நிரம்பி வழிகிறது. அதேபோன்று குளத்துப்பட்டி பெரியகுளம் கண்மாய் விரைவில் நிரம்பும் என்பதில் எந்தவிதமான ஐயமுமில்லை எனவே விவசாயிகள் அனைவரும் அமைதியுடன் ஒத்துழைப்பு கொடுக்குமாறு கேட்டுக கொண்டார். மேலும் தொடர்ந்து மழை பெய்து வரும் சூழ்நிலையில் எப்படியும் குளத்துப்பட்டி பெரிய கண்மாய் நிரப்ப உறுதியான நடவடிக்கை எடுக்கப்படும் என வாக்குறுதி அளித்ததை தொடர்ந்து பொதுமக்களும் , விவசாயிகளும் மகிழ்ச்சி அடைந்த அங்கிருந்து கலைந்து சென்றனர். அப்போது உடன் நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் ரெஜினா நாயகம், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத்தலைவர் யாகப்பன், அம்மையநாயக்கனூர் அ.தி.மு.க ,நகர செயலாளர் தண்டபாணி, நிலக்கோட்டை அ. தி. மு. க. மேற்கு ஒன்றிய செயலாளர் நல்லதம்பி, நிலக்கோட்டை நகர செயலாளர் சேகர், நூத்துலாபுரம் ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ், எஸ் தும்மலப்பட்டி கூட்டுறவு சங்க தலைவர் சக்திவேல், ஒன்றிய இளைஞரணி எம்ஜிஆர் மன்ற இணைச் செயலாளர்கள் முனியப்பன், காட்டு ராசா, மாவட்ட கவுன்சிலர் ராஜா, தகவல் தொழில்நுட்ப ஒன்றிய செயலாளர் குமரேசன், உள்பட பலர் இருந்தனர். நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!