விருதுநகர் மாவட்டம் தடகளம் கழகத்தின் மாவட்டச் செயலாளராக தளவாய்புரம் பகுதியைச் சேர்ந்த தொழிலதிபர் சிவராஜ் தேர்வு.

தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் கீழ் பல்வேறு மாவட்டங்களில் தடகள கழகம் சிறப்பாக செயல்பட்டு வருகின்றது. தமிழ்நாடு மாநில தடகள கழகத்தின் தலைவர் வால்டர் W.I.தேவாரம் ஐபிஎஸ் மற்றும் செயலாளரான லதா அவர்கள் மற்றும் விருதுநகர் மாவட்ட தடகள கழகத்தின் தலைவர் குவைத் ராஜா ஆகியோரின் பரிந்துரையில் விருதுநகர் மாவட்ட செயலாளராக புதிதாக தளவாய்புரம் பகுதியை சேர்ந்த தொழிலதிபர் அஜ்வா நைட்டீஸ் மற்றும் அஜ்வா பிட்னஸ் உரிமையாளர் திரு.சிவராஜ் அவர்கள் நியமிக்கப்ட்டுள்ளார்.இந்நிலையில் புதிதாக தேர்வான விருதுநகர் மாவட்ட தடகள கழகத்தின் மாவட்ட செயலாளர் சிவராஜ் அவர்களுக்கு அறிமுகம் மற்றும் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் அர்ஜுனா அவார்ட் வெற்றி பெற்ற மனத்தி கணேசன் மற்றும் விருதுநகர் அமெச்சூர் கபடி கழக அசோசியேசன் செயலாளர் கனி முத்துக்குமரன் ஆகியோர் கலந்து கொண்டு பாராட்டுக்களை தெரிவித்தனர்.இவ்விழாவில் பேசிய விருதுநகர் மாவட்ட தடகள கழகத்தின் மாவட்ட செயலாளர், தொழிலதிபருமான சிவராஜ், வரும் ஜனவரி 22, 23, 24-ம் தேதிகளில் தமிழ்நாடு அளவிலான ஜூனியர், சீனியர் தடகள போட்டிகள் சிவகாசியில் நடைபெற முயற்சிகள் எடுத்து வருவதாக தெரிவித்தார்.மேலும் நான் புதிதாக பொறுப்பேற்றுள்ள நிலையில் விருதுநகர் மாவட்டத்தில் தடகள போட்டிகளுக்கான ஒரு அகாடமியை திறக்க உள்ளேன். அதில் ஏழை, எளிய மாணவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்களின் எதிர்கால கனவிற்கும் துணை நிற்பேன் என தொழில் அதிபர் சிவராஜ் பாராட்டு விழாவில் தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image