
மதுரை அண்ணா நகரில் வீட்டை உடைத்து 100 ஆண்டுகள் பழமைவாய்ந்த பணம் மற்றும் நாணயங்கள் ,நகைகளை திருடிய மர்ம ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.கோமதிபுரம் 2வது மெயின் ரோடுபகுதியில் வசிப்பவர் ரமேஷ் 55 .இவர் குடும்பத்துடன் வெளியூர் சென்றுவிட்டு திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் பின்கதவு உடைக்கப்பட்டிருந்தது .இவர்பழங்காத்துபணம் மட்டும் நாணயங்களை சேகரிக்கும் பழக்கம் உள்ளவர். அவ்வாறு சேமித்து வைத்திருந்த 100 ஆண்டு கால பழமை வாய்ந்த பணம்மற்றும் நாணயங்கள்,வைரத்தோடு ,3 பவுன் நகை, 340 கிராம் வெள்ளி பொருட்கள் ,கடிகாரம் 2 ,மற்றும் கேமராக்களை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்று விட்டனர் இது தொடர்பாக ரமேஷ் அண்ணா நகர் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வருகின்றனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்