அழுகிய பயிர்களுடன் ஆட்சியருக்கு மனு அளித்த விவசாயிகள்:

தொடர் மழையால் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு இழப்பீடு வழங்க வலியுறுத்தி அழுகிய பயிர்களுடன் மதுரை மாவட்ட விவசாயிகள் ஆட்சியரிடம் இன்று மனு அளித்தனர்.தமிழகம் முழுவதும் கடந்த ஒருவார காலமாக தொடர்ந்து மழை பெய்து வருகின்றது. குறிப்பாக மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து பெய்து வரும் மழையால் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் அழுகிப் போய் உள்ளன.இதன் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு நிவாரணம் வழங்கக் கோரி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் அதன் மதுரை மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவன் தலைமையில் விவசாயிகள் திங்களன்று காலை அழுகிய பயிர்களுடன் ஆட்சியரிடம் மனு அளித்தனர்.அந்த மனுவில், மதுரை மாவட்டம் வடக்கு வட்டம் கிழக்கு வட்டம், மேலூர் வட்டம், செல்லம்பட்டி உள்பட மாவட்டம் முழுவதும் அறுவடைக்கு தயாராக இருந்த நெற்பயிர்கள் தொடர்ந்து பெய்த மழையினால் நீரில் மூழ்கி, தரையில் சாய்ந்தும், முளைத்தும் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. கடன் வாங்கி ஏக்கர் ஒன்றுக்கு 35 ஆயிரம் ரூபாய் வரை செலவு செய்த விவசாயிகள் செய்வதறியாது தவித்து வருகின்றனர்.குறிப்பாக குலமங்கலம், சமயநல்லூர், தேனூர், கட்டபுலிநகர், ஊர்மெச்சிகுளம், செல்லம்பட்டி ஒன்றியத்தில் கீழப்பட்டி என இந்த பகுதியினை சேர்ந்த விவசாயிகள் இன்று தங்களை சந்தித்து சேதமடைந்த பயிர்களுக்கு உரிய இழப்பீடு கேட்டு மனு கொடுத்துள்ளனர். எனவே மாவட்டம் முழுவதும் இன்னும் தொடர் மழையின் காரணமாக பாதிக்கப்பட்ட விவசாயிகளின் பாதிப்பிற்கு ஏற்ப உரிய இழப்பீடு வழங்கி மதுரை மாவட்ட விவசயிகளை பாதுகாத்திட வேண்டும் என கூறப்பட்டிருந்தது.மாவட்டத் தலைவர் எஸ்.பி.இளங்கோவனுடன், மாவட்ட நிர்வாகி கே.முருகேசன், து.இராமமூர்த்தி, நாகேந்திரன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மேற்கு ஒன்றியச் செயலாளர் பி.ஜீவானந்தம், செல்லமுருகன், பால்சாமி, சுல்தான், செந்தில் மற்றும் குலமங்கலம், சமயநல்லூர், செல்லம்பட்டி ஆகிய பகுதிகளை சேர்ந்த விவசாயிகள் கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image