Home செய்திகள் நாகூர் தர்கா 464 வது வருட கந்தூரி விழா தொடக்கம் – பாரம்பரிய பாய்மரம் ஏற்றப்பட்டது

நாகூர் தர்கா 464 வது வருட கந்தூரி விழா தொடக்கம் – பாரம்பரிய பாய்மரம் ஏற்றப்பட்டது

by mohan

தென்னிந்தியாவிலேயே மிகப்பெரிய தர்காவான நாகூர் தர்கா நாகப்பட்டினம் மாவட்டத்தில் அமைந்துள்ளது. வருடந்தோறும் இங்கு கந்தூரி விழா கொண்டாடப்படுவது வழக்கம். இன்று அதிகாலை ஃபஜ்ர் தொழுகைக்கு பிறகு நாகூர் தர்கா உயர்ந்த மினராக்களில் கொடிமரம் என்ற பாய்மரம் பாரம்பரிய முறையில் ஏற்றப்பட்டது.இது கந்தூரி விழா தொடக்கத்தின் முதல் நிகழ்வாகும். வரும் ஜனவரி 14ஆம் தேதி இரவு 8 மணிக்கு மேல் இந்த பாய் மரங்களில் புனித கொடி ஏற்றப்படும், இது கந்தூரி விழாவின் முதல் நிகழ்வாகும். மேலும் வருகின்ற 24ம் தேதி அதிகாலை நாகூர் ஆண்டவர் புனித சமாதியில் சந்தனம் பூசும் நிகழ்வு நடைபெறும் மற்றும் 27ஆம் தேதி இரவு பாய் மரங்களிலிருந்து புனித கொடி இறக்கப்படும். இத்தகைய நிகழ்வுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் நாகூர் தர்கா இடைகால நிர்வாகத்தினரும் மாவட்ட நிர்வாகமும் ஒருங்கிணைந்து செயல்படுத்திக் கொண்டிருக்கிறது. மேலும் கொரானா அச்சுறுத்தல் காரணமாக தமிழக அரசின் வழிமுறைகளையும் மாவட்ட ஆட்சியகத்தின் நெறிமுறைகளை பின்பற்றி இந்த திருவிழா நடைபெற இருப்பதாக நாகூர் தர்கா பரம்பரை ஆதீனம் செய்யது முஹம்மது கலிபா சாஹிப் ஊடகவியலாளிடம் தெரிவித்தார்…செய்தியாளர் அப்சர் உடன் கேமராமேன் வி காளமேகம் [10/01, 10:33 am] காளமேகம் சுந்தர் டயர்: பழுதான மின் வயரை சரி செய்த மின்வாரிய ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பொதுமக்கள் பாராட்டு மதுரை விஸ்வநாத புரத்தில் பகுதியில் மின் வயர்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது இதுகுறித்து அப்பகுதி மக்கள் ஆணையூர் மின்வாரிய அதிகாரிகளிடம் தகவல் தெரிவித்தனர் சம்பவ இடத்தை பார்வையிட்ட உயரதிகாரிகள் சம்பந்தப்பட்ட ஊழியர்களுக்கு உடனடியாக பழுதான உயர் மின் அழுத்த மின் கம்பிகளை மாற்ற உத்தரவிட்டனர் இதனை தொடர்ந்து லைட்மேன்கள் மற்றும் மின்வாரிய ஊழியர்கள் துரிதமாக செயல்பட்டு பழுதான மின் வயர்களை உடனடியாக மாற்றினார்கள் இதனால் பெரும் ஆபத்தில் இருந்து தப்பியதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர் உடனடியாக நடவடிக்கை எடுத்த ஆணையர் மின்வாரிய அதிகாரிகளுக்கும் மற்றும் ஊழியர்களுக்கும் விஸ்வநாதபுரம் பகுதி மக்கள் நன்றியை தெரிவித்தனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

TS 7 Lungies

You may also like

Social Media Auto Publish Powered By : XYZScripts.com
error: Content is protected !!