
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் நம்ம ஊரு பொங்கல் என்ற தலைப்பில் பாரதிய ஜனதா கட்சியினர் பொங்கல் விழா 10ம் தேதி கொண்டாட உள்ள நிலையில், பாஜக இராஜபாளையம் சட்டமன்ற தொகுதி பொறுப்பாளர் நடிகை கௌதமி இன்று தனது வீட்டில் பொங்கல் வைத்து கொண்டாடினர்.அதை தொடர்ந்து செய்தியாளர் சந்திப்பில், விவாதம் என்பது ஆரோக்கியமாக இருக்க வேண்டும். சில சந்திப்புகள் சமுதாயத்தை இழிவுபடுத்தும் விதமாக இருக்கலாம் ஆனால் அவ்வழியில் நடக்கக்கூடாது என பேசினார். மேலும் மக்களின் நலனுக்காக ஜனநாயகத்தை பின்பற்றி ஆரோக்கியமான விவாதமாக இருக்க வேண்டும்.இது தலைவர் இன்று ஒரு பதவியில் இருந்தாலும் சரி, பதவிக்கு வர வேண்டும் என்று அநாகரிக முறையில் பேசக்கூடாது என கூறினார்.உதயநிதி ஸ்டாலின் பெண்களை இழிவாக பேசுவது நாகரிகமற்ற செயல். அவருடைய குணத்தின் அடிப்படையில்தான் உள்ளத்தில் உள்ளது என்று விளக்கமாக வெளிவந்துள்ளது. ஒருவருடைய நடத்தையும் எண்ணமும் எவ்வாறு இருக்கிறது என்பது இதன் மூலம் வெளியே வந்து உள்ளது. அரசியலில் பதவிக்கு வர வேண்டும் என உதயநிதி பெண்களை இழிவுபடுத்தி பேசியதிற்க்கு கண்டனத்தை தெரிவித்து கொள்கிறேன் என பேசினார்.
செய்தியாளர் வி காளமேகம்