
அவனியாபுரம் ஜல்லிக்கட்டு போட்டியை அனைத்து சமூகத்தினர் சேர்ந்த 8 பேர் கொண்ட கமிட்டி அமைத்துபோட்டி நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது இதில் ஒரு சமூகத்தினரை சேர்க்காமல் தன்னிச்சையாக கமிட்டி செயல்பட்டு வருவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி கருப்பு கொடி ஏற்றி தங்களது எதிர்ப்பினை தெரிவித்து வருகின்றனர்.தை முதல் நாள் பொங்கல் தினத்தன்று ஜனவரி 14 ஆம் தேதி அவனியாபுரத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி நடைபெறும்.இதில் கடந்த 3 ஆண்டுகளாக அவனியாபுரத்தில் உள்ள மற்ற சமூகத்தினர் எதிர்ப்பு தெரிவிக்கவே மூன்று ஆண்டுகளாக உயர்நீதி மன்ற வழிகாட்டுதலின் பேரில் நீதியரசர்கள் முன்னிலையில் அவனியாபுரத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை நடத்தியது.இதே போல் இந்த ஆண்டும் பிரச்சனை வரவே நீதிமன்றம் அவனியாபுரம் ஜல்லிக்கட்டு கமிட்டியில் அனைத்து சமூகத்தினரையும் சேர்ந்த 8 பேர் கொண்ட கமிட்டி ஜல்லிக்கட்டு போட்டியை நடத்த உத்தரவிட்டுள்ளது.இந்த நிலையில் ஒரு சமூகத்தைச் சேர்ந்த முனியசாமியை என்பவரை கமிட்டியில் சேர்க்காமல் மீண்டும் தன்னிச்சையாக ஜல்லிக்கட்டு கமிட்டியின் நிர்வாகிகள் செயல்படுவதாக பொதுமக்கள் குற்றம் சாட்டி வந்தனர்.இதனால் கமிட்டி நிர்வாகிகளை கண்டித்து அவனியாபுரம் பஸ் நிலையத்தில் கருப்புக்கொடி ஏந்தியும், பொதுமக்கள் தங்கள் வீடுகளில் கருப்பு கொடி கட்டியும் தங்களது எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.
. செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்
Leave a Reply
You must be logged in to post a comment.