
வேலூர் மாவட்டத்தில் இம்மாதம் 14-ம் தேதி முதல் 28-ம் தேதி வரை எருதுவிடும் விழா நடத்தப்படும் என்று ஆட்சியர் சண்முகசுந்தரம் தெரிவித்து உள்ளார்.விழா நடத்த வேண்டுமானால் ரூ 10 கோடி வரை காப்பீடு செய்ய வேண்டும். அதேப்போல் எருது ஒன்றுக்கு ரூ 75 ஆயிரம் காப்பீடு எடுக்க வேண்டும். காலை 10 மணிக்கு ஆரம்பித்து பகல் 2 மணிக்குள் முடிக்க வேண்டும். பார்வையாளர்கள் முக கவசம் அணிய வேண்டும். எருதுடன் 4 பேர் மட்டுமே வரவேண்டும். விழாவை சிசிடிவி கேமிரா மூலம் பதிவு செய்ய வேண்டும். போன்ற நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளன.
வேலூர் வாரியார்