
மதுரையில் வ.உ.சி.. எழுச்சி நலச்சங்கம் சார்பில் முப்பெரும் விழா நடந்தது. மாநிலத் தலைவர் அண்ணாமலை தலைமை வகித்தார். மாநில பொதுச் செயலாளர் பாலமுருகன் முன்னிலை வகித்தார். பொருளாளர் அப்ரானந்தம் வரவேற்றார்.பொது செயலாளர் முகி பாலமுருகன் கூறுகையில், வெள்ளாளர் சமுதாய மாணவர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் அளிக்கப்பட்டு வந்த 26.5 சதவிகித இட ஒதுக்கீட்டில் 10 சதவிகித ஒதுக்கீடு மாற்று சமூகத்திற்கு சென்று விட்டது. இதனால், வெள்ளாளர் சமுதாய மாணவர்களுக்கு கிடைக்க வேண்டிய வேலை வாய்ப்பு தட்டி பறிக்க்கப்படுகிறது. வரும் தேர்தசில் 40 சதவிகித இட ஒதுக்கீடு வழங்கும் அரசியல் கட்சிக்கு சமுதாய மக்களின் ஆதரவு அளிக்கப்படும். வெள்ளாளர் பெயரை மாற்று சமுதாயத்தினருக்கு வழங்கும் அரசின் முயற்சிக்கு எதிர்ப்பு தெரிவிப்பதாக தெரிவித்தார். மாவட்டத் தலைவர் குமார், செயலாளர் சரவணன் உட்பட நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்