
மதுரை மாவட்டம் திருமங்கலம் அடுத்துள்ள தும்பகுண்டு கிராமத்தைச் சேர்ந்த பொன் இன்பராஜ். இவர் அப்பகுதியில் விவசாயம் செய்து வருகிறார். இந்த நிலையில் பிஜேபி அரசு விவசாயிகளை வஞ்சிக்கும் செயலில் ஈடுபட்டு வருவதை கண்டித்து டெல்லியில் போராடும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து திருமங்கலம் பகுதியில் 58 கால்வாய் நிரந்தரமாக தண்ணீர் திறந்து விட தமிழக அரசு அரசாணை வெளியிட வலியுறுத்தியும், 24 மணி நேரம் ஒரு நாள் தண்ணீரில் மிதந்து எதிர்ப்பை காட்டும் வகையில் நூதன முறையில் விவசாயி போராட்டம் நடத்தி வருகிறார்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்