
கொரோனா தாக்கம் காரணமாக உலகப் புகழ்பெற்ற ஜல்லிக்கட்டுப் போட்டியை நடத்த பல்வேறு கட்டுப்பாடுகள் விதித்து தைப் பொங்கல் திருநாளில் ஜல்லிக்கட்டு போட்டி நடத்த தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதில் ஜல்லிக்கட்டு காளையுடன் இருவருக்கு மட்டும் அனுமதியும் காளையுடன் வருபவர்கள் கொரோனா பரிசோதனை மேற்கொண்டு சான்றிதழ் பெற் வேண்டும் எனவும் தெரிவித்துள்ளது.மதுரை மாவட்டம் உசிலம்பட்டி தேவர் சிலை முன்பு தமிழக அரசு ஜல்லிக்கட்டு போட்டிக்கு விதிக்கப்பட்ட நிபந்தனைகளை தகர்த்த வலியுறுத்தி ஜல்லிக்கட்டு காளையுடன் பல்வேறு கிராமங்களை சேர்ந்த மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஜல்லிக்கட்டுப் போட்டிக்கு விதிக்கபட்ட விதிமுறைகளை தகர்த்த வேண்டும் எனவும் சாலை மறியலில் ஈடுபட்ட மக்கள் கோரிக்கை விடுத்தனர்.
உசிலை சிந்தனியா