
இராமநாதபுரம் மாவட்டம் போகலூர் கிழக்கு ஒன்றிய திமுக., சார்பில் கிராம சபை கூட்டம் உரப்புளி கிராமத்தில் நேற்று மாலை நடத்த ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இதற்கு கொடி கட்டும் பணியில் உரப்புளியைச் சேர்ந்த மோகன சுந்தரம் மகன் ராஜேஷ் ஈடுபட்டிருந்தார். அப்போது அந்த வழி செல்லும் மின்கம்பி அவர் கையில் பிடித்திருந்த கம்பியில் உரசி ராஜேஷ் உடலில் மின்சாரம் பாய்ந்து உயிரிழந்தார். இதனையடுத்து, திமுக., மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல் படி ராஜேஷ் குடும்பத்தாருக்கு மாவட்ட பொறுப்பாளர் காதர் பாட்சா முத்து ராமலிங்கம் ஆறுதல் கூறி திமுக., சார்பில் நிதி உதவி வழங்கினார்.