அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு தமிழக முதல்வா் துணை முதல்வா் தலைமையில் நடக்கும் -ஆர் பி உதயகுமார் தகவல்:

மதுரை மாவட்டம் அலங்காநல்லூர் பாலமேடு ஜல்லிக்கட்டு நடக்கும் வாடிவாசல் பகுதிகளை வருவாய் துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். வருகிற ஜல்லிக்கட்டு தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் பன்னீர்செல்வம் அவர்கள் தலைமையில் அரசின் வழிகாட்டுதல் படியும் சிறப்பாக நடக்கும் என கூறினார். இந்நிகழ்ச்சியில் சோழவந்தான் சட்டமன்ற உறுப்பினர் மாணிக்கம், மாவட்ட ஆட்சியர் அன்பழகன், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜித்குமார், துணை கண்காணிப்பாளர் ஆனந்த அரோக்கியராஜ், வருவாய் கோட்டாட்சியர் முருகானந்தம், வட்டாட்சியர் பழனிக்குமார், அதிமுக ஒன்றிய செயலாளர் ரவிச்சந்திரன், முன்னாள் சர்க்கரை ஆலை தலைவர் ராம்குமார், மற்றும் ஜல்லிக்கட்டு விழா குழுவினர் சுந்தர்ராஜ், பாலாஜி, சுந்தரராகவன், கணேசன் மற்றும் அலங்காநல்லூர் பாலமேடு பேரூராட்சி செயல் அலுவலர்கள் சின்னசாமி பாண்டியன், தேவி,கால்நடை மருத்துவ குழுவினர், சுகாதாரத்துறை மருத்துவர்கள், ஆகியோர் கலந்து கொண்டனர் .மேலும் அமைச்சர் கூறியதாவது.. ஆவணியாபுரம் 14 ம் வியாழக்கிழமை, பாலமேடு 15ம் தேதி வெள்ளிக்கிழமை அலங்காநல்லூர் 17ஆம் தேதி சனிக்கிழமையும் அரசு வழிகாட்டுதல் படி நடக்கும். மேலும் 9ஆம் தேதி மாடுபிடி வீரர்கள் பதிவும் 11ம் தேதி காளைகள் பதிவுநடைபெறும். என தெரிவித்தார்.

இந்த ஜல்லிக்கட்டு
கொரோனா காலத்தில் நடைபெறுவதால் சமூக இடைவெளி விட்டு பாரவையாளர் அமர்வது உள்ளிட்ட ஆய்வு, மாடுபிடி வீரர்கள் கிருமி நாசினி தெளிக்க வேண்டும் கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும், தெர்மல் கருவி மூலம் ஆய்வு செய்தபின் 8 சுற்றுகள் அமைக்கப்படும், ஜல்லிக்கட்டு போட்டியில் மணிக்கு 75 நபர் வீதம் மொத்தம் 8 சுற்றாக 300 வீரர்களுக்கு மிகாமல் அனுமதி அளிக்கப்படும். வெளி மாவட்ட அனைத்து காளைகளுக்கும் அனுமதி, அனைவருக்கும் வாய்ப்புகள் தரப்படும். என்ற நோக்கத்தில் ஒரு வாடிவாசலில் அவிழ்க்கப்பட்ட காளைகளை இன்னொரு ஜல்லிக்கட்டில் அவிழ்க்க அனுமதி இல்லை. இது அரசின் உத்தரவு அல்ல, விழா குழுவின் முடிவு என்றார்.நஷ்டம் ஏற்பட்டாலும் சர்க்கரை ஆலை விவசாயிகளுக்காக இயக்கப்படும், அதிகாரப்பூர்வமாக கால்நடை துறை ஜல்லிக்கட்டு காளைகளை பரிசோதனை செய்து தகுதி பெற்ற காளைகளை மட்டுமே களமிறங்கும், மேலும் சாத்தியார் அணையைப் பார்வையிட்ட அமைச்சர் பொங்கலோ பொங்கல் என சாத்தியார் அணை பொங்கி வருகிறது. விரைவில் விவசாயிகளும் கலந்தாலோசித்து அணை திறக்கப்படும் என தெரிவித்தார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image