திருப்பரங்குன்றத்தில் குடிப்பழக்கத்துக்கு அடிமையான வாலிபர் விஷம் குடித்து தற்கொலை.

திருப்பரம்குன்றம் ஜிஎஸ்டி ரோட்டை சேர்ந்தவர் முருகன் 38 .இவருக்கு குடிப்பழக்கம் இருந்து வந்தது இதன் காரணமாக வயிற்று வலியும் இருந்தது .இதற்கு சிகிச்சை பெற்றும் குணமடையவில்லை .இதனால் மனமுடைந்த முருகன் வீட்டில் விஷம் அருந்தி மயங்கி கிடந்தார் .இவரை சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று சேர்த்தனர் அங்கு சிகிச்சை பலன் இல்லாமல் முருகன் பரிதாபமாக உயிர் இழந்தார்.இதுகுறித்து மனைவி பாக்கியலட்சுமி கொடுத்த புகாரின் பேரில் திருப்பரங்குன்றம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image