சுரண்டை அருகே அம்மா மினி கிளினிக்-அமைச்சர் துவக்கி வைத்தார்..

தென்காசி மாவட்டம், சுரண்டை அருகே உள்ள சிவநாடானூர் மற்றும் பலபத்திரராமபுரம் ஆகிய கிராமங்களில் மக்கள் நல்வாழ்வு மற்றும் குடும்பநலத்துறை மூலம் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்கினை மாவட்ட ஆட்சித்தலைவர் தலைமையில், தென்காசி சட்டமன்ற உறுப்பினர் எஸ்.செல்வமோகன்தாஸ்பாண்டியன் முன்னிலையில், அமைச்சர் ராஜலட்சுமி திறந்து வைத்து தெரிவித்ததாவது: கிராமபுறங்களில் வாழ்கின்ற ஏழை எளிய மக்களின் முன்னேற்றத்திற்காக எண்ணற்ற நலத்திட்டங்களை உருவாக்கி செயல்படுத்தி வருகிறார்கள். ஆரம்ப சுகாதார நிலையங்கள் இல்லாத, ஏழை, எளிய மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களைக் கண்டறிந்து, சாதாரண காய்ச்சல் போன்ற நோய்களுக்கு உடனடியாக அந்தப் பகுதியிலேயே சிகிச்சை பெறக்கூடிய அளவிற்கு தமிழ்நாடு முழுவதும், ஒரு மருத்துவர், ஒரு செவிலியர் மற்றும் ஒரு உதவியாளருடன் 2,000 முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் திட்டத்தினை கடந்த 14.12.2020 அன்று தமிழக முதலமைச்சரால் துவங்கி வைக்கப்பட்டுள்ளது.தென்காசி மாவட்டத்தில் கீழப்பாவூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட சிவநாடானூர், ஆலங்குளம் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட பலபத்திரராமபுரம் ஆகிய கிராமங்களில் முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் தொடங்கப்பட்டுள்ளது. அம்மா மினி கிளினிக்குகள் மூலமாக ஏழை, எளிய மக்கள் அதிகமாக வசிக்கின்ற பகுதிகளைத் தேர்ந்தெடுத்து, அங்கேயே அவர்கள் தங்கள் உடலில் ஏற்படுகின்ற நோய்களுக்கு சிகிச்சை பெற்றுக்கொள்ள இயலும். இது வரலாற்றுச் சாதனையாகும்.முதலமைச்சரின் அம்மா மினி கிளினிக்குகள் கிராம புற பகுதிகளில் காலையில் 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலையில் 04.00 மணி முதல் 07.00 மணி வரையிலும் செயல்படும். நகர பகுதிகளில் காலையில் 08.00 மணி முதல் மதியம் 12.00 மணி வரையிலும், மாலையில் 04.00 முதல் 08.00 மணி வரையிலும் செயல்படும். அம்மா மினி கிளினிக்கில் அனைத்து நோய்களுக்கும் பரிசோதனைகள் செய்யப்படும் பொதுமக்கள் பயன்படுத்திக் கொண்டு தங்களது உடல் நலத்தை பேணி பாதுகாத்துக் கொள்ள வேண்டும், என அமைச்சர் தெரிவித்தார் இந்நிகழ்ச்சியில் 10 தாய்மார்களுக்கு தலா ரூ.2000 மதிப்புள்ள அம்மா பரிசு நலப்பெட்டகத்தை அமைச்சர வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் துணை இயக்குநர் (சுகாதாரப்பணிகள்) மரு.கலுசிவலிங்கம், துணை இயக்குநர் சுகாதாரப்பணிகளின் நேர்முக உதவியாளர் இ.ரகுபதி, தென்காசி மாவட்ட கூட்டுறவு ஒன்றிய முதன்மை அமைப்பாளா சண்முகம், நெசவாளர் கூட்டுறவு சங்கத்தலைவர் ஆறுமுகம், ஊத்துமலை தொடக்க வேளாண்மை கூட்டுறவுச்சங்கத்தலைவர் வீரபாண்டியன், ஒன்றிய செயலாளர் என்.ஹெச்.எம்.பாண்டியன் செந்தில் குமார், உட்பட வட்டார மருத்துவ அலுவலர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.

செய்தியாளர்
அபுபக்கர்சித்திக்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image