மகளிர் குழுக்கு கடன் வழங்கிய மைக்ரோ பைனான்ஸ்மீதுபொதுமக்கள் குற்றச்சாட்டு .

விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் நகர் மற்றும் இராஜபாளையம் ஊராட்சி பகுதிகளில் மைக்ரோ ஃபைனான்ஸ் கம்பெனிக்காரர்கள் மகளிர் சுய உதவிக் குழுவினருக்கு சிறிய தொழில் செய்பவர்களுக்கும் 10 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை வாரகடனாக கொடுத்து வசூல் செய்து வருகின்றனர் இதில் சிலர் கொரோனா காலத்தில் பணம் கட்ட கால கேடு கொடுத்த நிலையில் தற்போது கடன் வாங்கியவர்கள் திருப்பிகட்டி வருகின்றனர்இன்நிலையில் இராஜபாளையம் PACR அரசு மருந்துவமனை அருகில் டீக்கடை நடத்தி வருபவர் மாங்குடி பகுதியை சேர்ந்த அர்ஜுனன் இவரது மனைவி கலாவதி L&T மைக்ரோ ஃபைனாஸ் நிறுவனத்தில் இவர்கள் 35 ஆயிரம் கடன் பெற்றுள்ளார் தவனை கட்டி வரும் நிலையில் கடந்த இரண்டு மாத தவனை கட்ட வேண்டிய நிலையில் நேற்றை முன்தினம் 1950 ரூபாய் தவனைக்கு1300 ரூபாய் கட்டியுள்ளனர் மீதி பணம் நேற்று 650 பணம் கொடுக்கும் போது ஜனவரி தவனையும் கட்ட வேண்டும் என வாக்குவாதத்தில் ஈடுபட்ட போது டீ கடையில் இருந்த சுடு தண்ணீர் மற்றும் சுடு பால் அர்ஜுன் கலாவதி மகள் ஸ்ரீ வர்த்தினி மீது ஊற்றப்பட்டு காயமடைந்த நிலையில் இராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் இதுபோன்று வசூலில் ஈடுபடுபவர்கள் அடி ஆட்களை கொண்டு மிரட்டுவதாகவும் மிக தரம் தாழ்ந்த வார்த்தைகளை பேசி வருவதாகவும் பாதிக்கப்பட்ட குழந்தையின் அம்மா கலாவதி கூறினார்மேலும் இதுகுறித்து இராஜபாளையம் பகுதியில் அனைத் திந்திய மாதர் சங்கம் சார்பில் கூறும் போது இது மற்றும் மைக்ரோ ஃபைனான்ஸ் நிறுவனங்கள் கந்து வட்டிகர்களை காட்டிலும் கொடுமையாக நடந்து கொள்வதாகவும் அவதூறாகவும் பேசி அசிங்கப் படித்தி வருவதால் தற்போது உச்ச கட்டமாக சிறுமி மீது சுடு தண்ணீர் மற்றும் பால் ஊற்றி காயப்படுத்தி உள்ளனர் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் மாதர் சங்கத்தினர் தமிழகம் முழுவதும் போராட்டம் நடத்துவதாகவும் தெரிவித்தனர்

செய்தியாளர் வி காளமேகம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image