மீனாட்சி மருத்துவமனையின் இதய மின்இயற்பியலாளரின் சாதனை.

மதுரை / ஜனவரி 5, 2021: 6 ஆண்டுகள் என்ற காலஅளவிற்குள் திடீரென ஏற்பட்ட மூன்று மாரடைப்புகளின் பின்விளைவுகளிலிருந்து 65 வயதான முன்னாள் இராணுவ வீரரின் உயிரை காக்கும் வகையில் அவரது உடலில் இம்பிளான்டபிள் கார்டியோவெர்ட்டர்-டிஃபைப்ரிலேட்டர் (ICD) என்று அழைக்கப்படும் ஒரு தனிச்சிறப்பான இதய லய மேலாண்மை கருவியினை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் பணியாற்றும் இதய – மின்இயற்பியலாளர் பொருத்தியிருக்கிறார்.ப்ளூடூத் – ன் மூலம் இயக்கப்படுகின்ற, கைகடிகாரம் அளவில் அபாட் நிறுவனத்தால் தயாரிக்கப்பட்டுள்ள இக்கருவி, இதய லயத்தை கண்காணிக்கவும் மற்றும் சீரற்ற இதயத்துடிப்புகளை கண்டறியவும் நோயாளியின் மார்பில் பொருத்தப்படுகிறது. இயல்புக்கு மாறான, அசாதாரண இதய லய பிரச்சனையை சரிசெய்வதற்காக இதயத்தோடு இணைக்கப்பட்டுள்ள ஒயர்களின் வழியாக மின்அதிர்ச்சிகளை இக்கருவி அனுப்புகிறது. இந்த ஐசிடி கருவியானது, ஒரு ஸ்மார்ட்போனில் இருக்கும் தொலைதூர கண்காணிப்பு செயலியோடும் தகவல் பரிமாற்றத்தை மேற்கொள்கிறது. இதய செயல்பாடு குறித்த தரவுகளை இக்கருவியால் மருத்துவர்களுக்கு அனுப்ப இயலும்; இதன்மூலம் நோயாளியின் இதய நலத்தை தொலைதூரத்திலிருந்தே மருத்துவர்களால் கண்காணிக்க முடியும் மற்றும் நோயாளியின் உயிரைக் காப்பதற்காக தொடக்கத்திலேயே மருத்துவ சிகிச்சையை மேற்கொள்ள இயலும்.மீனாட்சி மிஷன் மருத்துவமனை, மதுரையில் இந்த அறுவைசிகிச்சை செயல்பாட்டிற்கு தலைமை வகித்த இதயவியல் நிபுணரும், மின்இயற்பியலாளருமான டாக்டர். பி. ஜெயபாண்டியன் இந்த சிகிச்சை குறித்து பேசுகையில், “விருதுநகர் மாவட்டத்தின் அருப்புக்கோட்டை என்ற ஊரைச் சேர்ந்த இந்நோயாளி, இதய தமனி நோயால் பாதிக்கப்பட்டிருப்பவர். 10 ஆண்டுகளுக்கு முன்பு இவருக்கு மாரடைப்பு ஏற்பட்டது. அதற்காக ஆஞ்சியோபிளாஸ்டி சிகிச்சையும் இவருக்கு மேற்கொள்ளப்பட்டது. நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு இதய செயல்பாடு நிறுத்தமும் அவருக்கு ஏற்பட்டது. இதனோடு தொடர்பில்லாத வேறொரு மருத்துவ சிகிச்சை செயல்முறைக்காக சில வாரங்களுக்கு முன்பு மீனாட்சி மருத்துவமனைக்கு இவர் அழைத்து வரப்பட்டிருந்தார். அதற்கான அறுவைசிகிச்சைக்குப் பிந்தைய காலகட்டத்தில், வெறும் 12 மணி நேரங்கள் என்ற காலஅளவிற்கும் இருமுறை மாரடைப்புகள் இவருக்கு ஏற்பட்டன. எங்களது மருத்துவ குழுவினர் உடனடியாக அவரை அறுவைசிகிச்சை அரங்கிற்கு மாற்றினர் மற்றும் அவரது மார்பில் இந்த ஐசிடி கருவி பொருத்தப்பட்டது,” என்று கூறினார்.அவர் மேலும் பேசுகையில்: “இந்த ஐசிடி கருவி, 24 மணி நேரமும் அவரது இதயத்தின் செயல்பாடுகளை கண்காணித்து வருவதால், இந்நோயாளி இப்போது இயல்பான வாழ்க்கையை மேற்கொள்ள இயலும். இக்கருவியானது, உயிருக்கு அச்சுறுத்தலான எந்தவொரு அதிவேக இதயத்துடிப்பை கண்டறிந்து வெறும் மூன்றே நொடிகளில் ஒரு மின்அதிர்ச்சியை இதயத்திற்கு அனுப்புவதன் மூலம் அதை சரிசெய்யும் நடவடிக்கையை எடுக்கும். இந்த மின்னதிர்ச்சியானது, இதயலயத்தை இயல்புநிலைக்கு திரும்பவும் மாற்றும். சில நேரங்களில் இந்த மின்அதிர்ச்சி வழங்கப்பட்டதற்குப் பிறகு இதயத்துடிப்பு மிக மெதுவாக இருக்கலாம். இந்த இதயத்துடிப்பு இயல்பு அளவை விட மிகவும் குறையுமானால், இயல்பான இதய லயம் திரும்ப வரும்வரை இதயத்தை வேகமாக துடிக்குமாறு தூண்டிவிடுகின்ற ஒரு பேஸ்மேக்கர் கருவியைப் போல, இது செயல்படும். ஸ்மார்ட்போன் இணைப்புநிலை வழியாக நிகழக்கூடிய இதுபோன்ற எந்தவொரு மாற்றங்கள் குறித்து அறுவைசிகிச்சை மருத்துவருக்கு உடனடியாக எச்சரிக்கைத் தகவல் கிடைக்கும்,” என்று விளக்கமளித்தார்.இந்தியாவில் இதய செயலிழப்பு நிகழ்வுகளினால் ஏற்படும் சுமை மிக அதிகமாகும். 491 600–1.8 மில்லியன் என்ற வருடாந்திர நேர்வு எண்ணிக்கையோடு, இந்த இதய செயலிழப்பு பாதிப்புகளின் நேர்வு 1.3 மில்லியனிலிருந்து, 4.6 மில்லியன் வரை இருக்கக்கூடும் என மதிப்பிடப்பட்டுள்ளது. உயிருக்கு அச்சுறுத்தலான இயல்புக்கு மாறான இதய லயம் / துடிப்புகள், நோயாளியின் இதயம் அதிவேகமாக துடிக்கின்றபோது நிகழக்கூடும். குறைந்துவிட்ட இதய செயல்பாடு மற்றும் சிறப்பான மருத்துவ சிகிச்சை தரப்பட்ட போதிலும் அதிகரித்து வரும் இதய செயலிழப்பு நிலையிலுள்ள நோயாளிகளிடம் திடீர் உயிரிழப்பு ஏற்படுவதை தடுப்பதற்காகவும் மற்றும் இதயத்தின் இயற்கையான துடிப்பு செயல்பாட்டை மீண்டும் கொண்டு வரவும் ஐசிடிகள் பயன்படுத்தப்படுகின்றன. உலகளவில் உயிரிழப்புக்கான மிக பொதுவான காரணமாக இருக்கும் திடீர் மாரடைப்பின் காரணமாக இந்தியாவில் மொத்த உயிரிழப்புகளில் சுமார் 10 சதவிகிதம் நிகழ்கின்றன என்று மதிப்பிடப்பட்டுள்ளது.“இதய லய மேலாண்மை கருவிகளில் புதிய தொழில்நுட்பங்கள், மருத்துவர்களுக்கும் மற்றும் மருத்துவமனைகளுக்கும் அவர்களது நோயாளிகளை சிறப்பாக மேலாண்மை செய்வதற்கும், சிகிச்சையளிக்கவும் இன்றியமையாதவையாகும். நோயாளிகள், அவர்களது உடல்நலத்தை சிறப்பாக பேணுவதில் அதிக ஈடுபாட்டுடன் இருக்கவும் இது ஏதுவாக்கும். ஐசிடி போன்ற கருவிகள், நோயாளிகளுக்கு அவர்களது உடல்நலத்தை அதிக அக்கறையோடு கவனித்துக்கொள்ளுமாறு ஊக்குவிக்கும். ஒரு தனிப்பட்ட நபரின் மருத்துவ தேவைகளுக்குப் பொருத்தமானதாக சிகிச்சையினை பிரத்யேகமாக ஆக்குவதற்கென ஸ்மார்ட்போன் செயலி மற்றும் ப்ளூடூத் இணைப்பு வசதி உள்ளதாக இந்த ஐசிடி கருவிகள் இருக்கின்றன,” என்று டாக்டர் ஜெயபாண்டியன் மேலும் விளக்கமளித்தார்.“தொலைதூர கண்காணிப்பு செயல்பாட்டின் நேர்மறையான தாக்கம் திரும்பத்திரும்ப நிரூபிக்கப்பட்டுள்ளது. நோயாளிகளுக்கு சிறப்பான சிகிச்சை விளைவுகள் கிடைப்பதற்கு இது வழிவகுக்கிறது” என்று அபாட் நிறுவனத்தின் இதய லய மேலாண்மை பிசினஸ் பிரிவின் டிவிஷனல் துணைத்தலைவரும், தலைமை மருத்துவ அதிகாரியுமான டாக்டர். அவி ஃபிஷர் கூறினார். வீட்டிற்கு வெளியே இருக்கின்ற நேரத்திலும் கூட எந்த நேரத்திலும் தங்களது மருத்துவரோடு தொடர்புகொள்ளும் திறனை நோயாளிகளுக்கு அபாட் – ன் சிறப்பான தொழில்நுட்பங்கள் வழங்குகின்றன. நோயாளிகள், அவர்களை பராமரிப்பவர்கள் மற்றும் மருத்துவர்களுக்கிடையே தகவல் பரிமாற்றத்தையும், ஈடுபாட்டையும் மேம்படுத்த உதவும் நவீன தொழில்நுட்பங்களை வழங்க வேண்டும் என்ற எமது பொறுப்புறுதியை இவைகள் இன்னும் வலுப்படுத்துகின்றன,” என்று அவர் மேலும் கூறினார்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image