
சோழவந்தான் அருகே மன்னாடிமங்கலம் கிராமத்தில் இருபதாண்டு முன்பு மந்தையில் நாடகமேடை அமைத்து கொடுத்திருந்தனர் இதை இங்குள்ள திருவிழா மற்றும் அரசியல் விழாக்களுக்கு பொதுமக்கள் பயன்படுத்தி வந்தனர் நாடக மேடையை சுற்றி ஊராட்சி அலுவலகம் கிராம நிர்வாக அலுவலகம் அங்கன்வாடி அரசு ஆரம்பசுகாதார நிலையம் செவிலியர் குடியிருப்பு மேல் நிலை நீர் தேக்க தொட்டி இப்படி கட்டிடங்கள் அடுத்தடுத்து கட்டப்பட்டுள்ளது இதனால் நாடக மேடை மட்டும் தனியாக உள்ளது கிராம பொதுமக்கள் அமர்வதற்கான இடம் இல்லை நாடக மேடை கட்டி 20 ஆண்டுகளுக்கு மேல் ஆகிவிட்டதால் சேதமடைந்து எப்போது விழும் என்ற தருவாயில் உள்ளது இதனால் கோயில் விழாக்கள் மற்றும் அரசியல் விழாக்கள் தனியாக பணம் செலவழித்து மேடைகள் அமைத்து கொண்டாடி வருகின்றனர் ஆகையால் இங்கு உள்ள கிராம மக்கள் புதிதாக நாடக மேடை அமைத்துக் கொடுத்தாள் வருங்காலத்தில் நடக்கக்கூடியஅனைத்து விழாக்கள் மட்டும் அரசியல் விழாக்கள் நடத்துவதற்கு ஏதுவாக இருக்கும் என்று தெரிவித்தனர் இதுகுறித்து இப்பகுதி சமூக ஆர்வலர்கள் மாவட்ட கலெக்டரிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்