விரகனூர் டேம் அருகே காணாமல் போன 86 ஏக்கர் கருப்பண பிள்ளை ஏந்தல்கண்மாய்.

பொதுப்பணி துறையினரின் அலச்சியத்தால் ஆக்கிரமிப்பாளர்களால் “60 ” அடி பாசன கால்வாய் மூன்றடி வாய்க்காலக மாறியுள்ளது.ஆக்கிரமிப்பாளர்களால் 60 அடி பாசன வாய்க்கால் நடுவே கட்டப்பட்ட வீடுகள்மதுரை மாவட்டம் கிழக்கு ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கருப்ப பிள்ளை ஏந்தல் கிராமம் உள்ளது. இது ஆண்டார் கொட்டார ஊராட்சிக்கு உட்பட்ட கிராமமாக உள்ளது.இங்குள்ள கருப்ப பிள்ளை ஏந்றல் கண்மாய் 86 ஏக்கர் பரப்பளவு கொண்ட மிகப்பெரிய ஏரி போல் இருந்தது.தற்போது ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் சிக்கி இரண்டு ஏக்கர் மட்டுமே உள்ளது இது குறித்து பொதுப்பணித்துறை அதிகாரிகளிடம் சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை.புகார் கூறினால் மேலூர் 9வது டிவிசன் பிரிவில் வரும் பாசன கால்வாய் தற்போது முறையான ஆவணம் இல்லை என அலட்சியமாக கூறுகின்றனர்.தற்போது பத்திர பதிவு இந்த பகுதி சர்வே எண் இல்லாமல் வேறு சர்வே எண் கொண்டு பத்திரப்பதிவு வழங்கப்படுவதாக குற்றச்சாட்டு கின்றனர்.இதனால் நீர்வள ஆதாரங்கள் அழிக்கப்படுகிறது.60 அடி கால்வாய் தற்போது ஆக்கிரமிப்பாளர்களால் தற்போது வெறும் மூன்றடி வாய்க்காலாக உள்ளது.இதனால் மழை காலங்களில் திடீரென ஏற்படும் பெரும் வெள்ளம் போன்ற சூழ்நிலைகளில் செம்பரம்பாக்கம் ஏரி போல் மிகுந்த சேதத்தை ஏற்படுத்தி பல ஆயிரம் பேர் உயிரிழக்க நேரிடும் என சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். நீர் நிலைகலை பாதுகாக்க வேண்டிய அரசு அலட்சியமாக இருந்தால் வரும் காலங்களில் பெரும் உயிர் மற்றும் பொருட் சேதத்தை ஏற்படுத்தும்.எனவே பொதுப்பணித்துறை அதிகாரிகள் காணாமல் போன கருப்ப பிள்ளை ஏந்தல் கம்மாய் மற்றும் வாய்க்காலை சீரமைத்து முறைப்படுத்தி நடவபிக்கை எடுக்க வேண்டும்.இதனால் எதிர்காலங்களில் செம்பரம்பாக்கம் ஏரியினால் ஏற்பட்ட பெரும் ஆபத்துகள் தடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.ஆக்கிரமிப்பாளர்கள் தற்போது 60 அடி பாசன வாய்காலில் வீடு கட்டி வருகின்றனர். இதனால் அருகில் உள்ள வயல்களில் உபரி நீர் தேங்குவதால் விவசாயம் செய்ய முடியவில்லை.எதிர்காலத்தில் ஏற்படும் பெரும் ஆபத்தினை பொதுப்பணித் துறையினர் உடனடியாக நடவடிக்கை எடுத்து சீரமைக்க கோரிக்கை விடுகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..