கீழக்கரையில் அதிமுகவை நிராகரிப்போம் திமுக மக்கள் சபை வார்டு வாரியான கூட்டம்…

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் திமுக சார்பில் அதிமுகவை நிராகரிப்போம் என திமுக மக்கள் சபை கூட்டம் கீழக்கரை கடற்கரைப் பள்ளி எதிரில் உள்ள இடத்தில் நடைபெற்றது. சேது பொறியியல் கல்லூரி சேர்மனும் கீழக்கரை மக்கள் சபை பொறுப்பாளருமான முகமது ஜலீல் திமுக மாவட்ட பொறுப்பாளர் காதர்பாட்சா முத்துராமலிங்கம் தலைமையிலும், கீழக்கரை நகர் செயலாளர் பசீர் அகமது, இளைஞரணி பொறுப்பாளரும் வழக்கறிஞருமான ஹமீது சுல்தான் ஆகியோர் முன்னிலையிலும் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட அப்பகுதி பொதுமக்கள் சாலை வசதி இல்லை,தெரு விளக்குகள் இல்லை,குடிநீர் வசதிகள் இல்லை குறிப்பாக பாதாள சாக்கடைத் திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். இதற்கு பதில் கூறிய திமுக மாவட்ட பொறுப்பாளர் முத்துராமலிங்கம் வருகின்ற சட்டமன்றத் தேர்தலில் திமுக ஆட்சி அமைந்தவுடன் முதல் அடிக்கல் நாட்டு விழா எனது தலைமையில் கீழக்கரையில் பாதாள சாக்கடை திட்டத்திற்கு நடைபெறும் என கூறிக் கொள்கிறேன். மேலும் இப்பகுதி பொதுமக்கள் குறைகளை உடனடியாக தீர்க்கப்படும் எனவும் தெரிவித்தார். இதில் மாவட்ட கவுன்சிலர் ரவிச்சந்திரன் ராம வண்ணி ,நகர அவைத்தலைவர் மணிகண்டன், நகர துணைச் செயலாளர்கள் ஜமால் பாரூக், கென்னடி, நகர பொருளாளர் சித்திக் ,மாவட்ட பிரதிநிதி மரைக்கா, மாணவரணி அமைப்பாளர் இப்திகார் ஹசன், அக்பர்அலி, மக்கள் டீம் காதர், ரஹ்மத்துல்லாஹ் மீனவர் அணி அமைப்பாளர் சுஐபு, தம்பி வாப்பா, அக்பர் அலி, முன்னாள் துணைச் சேர்மன் ஹாஜா முஹைதீன்,  நைம் 500 பிளாட் மரகப சித்திக், 500 பிளாட் பகுருதீன் உட்பட ஏராளமான நிர்வாகிகள் கலந்து கொண்டனர். தகவல் தொழில்நுட்ப பிரிவு எஸ் கே வி முகமது ஹாஜா சுஐபு நன்றி கூறினார்.

இன்றைய செய்தி நிரந்தர வரலாறு
கீழை நியூஸ்

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image