
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையில் தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி உத்தரவின்படி தமிழகத்தில் இருக்கும் அனைத்து நியாயவிலை கடைகளிலும் பொங்கல் பரிசாக ரூபாய் 2500 ரொக்கத்துடன் பச்சரிசி 1 கிலோ, சர்க்கரை 1 கிலோ, முந்திரி, உலர் திராட்சை, ஏலக்காய், முழு கரும்பு, ஆகியவற்றை தமிழகம் முழுவதும் இன்று தொடங்கப்பட்டு வருகிறது அதன் தொடர்ச்சியாக கீழக்கரை பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் இத்திட்டத்தை மாவட்ட ஆட்சித் தலைவர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் மற்றும் ராமநாதபுரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் மணிகண்டன் குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்பினை வழங்கி நிகழ்ச்சியை தொடங்கி வைத்தனர்.
இதில் அதிமுக நகர செயலாளர் ஜகுபர் உசைன் இளைஞர் இளம்பெண் பாசறை செயலாளர் செல்வ கணேசன் பிரபு, மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
“இன்றைய செய்தி நிரந்தர வரலாறு”
படியுங்கள் கீழை நியூஸ்
S.K.V முகம்மது சுஐபு