
மழைநீர் வடிகால் வாய்க்காலில் ஹோட்டல்களில் பயன்படுத்தும் டீ கப்புகள் மற்றும் குப்பைகள் அல்லாமல் கழிவுநீர் நீராக மாறி திறந்து கிடக்கும் அவலம்!!!!!!! மதுரை மாநகராட்சிக்கு உட்பட்ட 17வது வார்டு பைபாஸ் சாலை பிரபல தனியார் உணவகம் எதிரே மழைநீர் வடிகால் கால்வாயை ஒன்று உள்ளது இந்த கால்வாயில் பொதுமக்கள் பயன்படுத்திய தீர்ப்புகளும் மற்றும் பிளாஸ்டிக் கழிவுகளும் மழை நீரும் சேர்ந்து அடைப்பு ஏற்பட்டுள்ளது மேலும் இது திறந்தவெளியில் இருப்பதால் இதில் யாரேனும் தவறி விழுந்து விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது பேப்பர் கப்புகளை வெளியே அனுப்பி குப்பையில் முறைப்படி தொட்டியில் போடாமல் கால்வாயில் வீசி செல்வதால் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்பட்டு நீர் வெளியே வந்து துர்நாற்றமும் வீசுகிறது என அப்பகுதி மக்கள் குற்றம் சாட்டுகின்றனர் மேலும் இதனை அகற்றி வாய்க்கால்களை மூட வேண்டும் என பொதுமக்களும் சமூக ஆர்வலர்களும் கோரிக்கை விடுக்கின்றனர் மாநகராட்சி அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ஆணையாளர் உத்தரவு இட வேண்டும் எனவும் கோரிக்கை வைக்கின்றனர். அசம்பாவிதம் நடக்கும் முன் அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பார்களா?????
செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்