காவிரி குண்டாறு திட்டத்திற்கு 20 நாளில் அடிக்கல்.முதல்வர் எடப்பாடி கே.பழனிசாமி திட்டவட்டம்

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி, ராமநாதபுரம் மாவட்டத்தில் இன்ற தேர்தல் பிரசாரம் மேற்கொண்டுள்ளார். ராமநாதபுரத்தில் அவர் பேசியதாவது: தமிழகத்தில் உழைக்கும் பெண்கள் 3 லட்சம் பேருக்கு, தலா ரூ.25 ஆயிரம் மானிய தொகையுடன் ஸ்கூட்டர் வழங்கப்பட்டு வருகிறது. தாலிக்கும் தங்கம் வழங்கும் திட்டத்தில் 4 கிராம் 8 கிராமாக உயர்த்தி வழங்கப்படும் 2016 சட்டமன்ற தேர்தலில் அப்போதைய முதல்வர் ஜெயலலிதா வாக்குறுதி அளித்தார். இதன்படி தற்போது தாலிக்கு தங்கம் 8 கிராம் வழங்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் உள்ள 11,35,600 மகளிர் சுய உதவி குழுக்களுக்கு ரூ.12 ஆயிரம் கோடி கடனுதவி வழங்கப்பட்டுள்ளது. உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 50 சதவீதம் இட ஒதுக்கீடு அறிவித்து செயல்படுத்திய அரசு அதிமுக அரசு. ராமநாதபுரம் மாவட்ட விவசாயிகளின் பயிர் சாகுபடிக்கு வசதியாக ரூ.14 ஆயிரம் கோடி மதிப்பிலான காவிரி -குண்டாறு இணைப்பு திட்டம் இன்னும் 20 நாளில் அடிக்கல் நட்டு தொடங்கி வைக்கப்படும். இத்திட்டம் செயல்பாட்டால் அடுத்த 5 ஆண்டுகளில் ராமநாதபுரம் செழிப்பான மாவட்டமாக திகழும். பாம்பன் அருகே குந்துகாலில் ரூ.70 கோடி மதிப்பில் மீன்பிடி துறைமுகம் அமைக்கப்பட்டுள்ளது. மத்திய, மாநில அரசுகளின் மானியத்துடன் 26 பேருக்கு ஆழ்கடல் மீன்பிடி விசைப்படகு வழங்கப்பட்டுள்ளது. 7.5 சதவீத இட ஒதுக்கீட்டில் அரசு பள்ளி மாணவர்கள் 313 பேருக்கு நடப்பு கல்வி ஆண்டில் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அடுத்தாண்டு 11 அரசு மருத்துவக் கல்லூரிகளில் 1,680 மருத்துவ கல்வி இடங்கள் உருவாக்கப்படுவதால் 130 இடங்கள் அரசு பள்ளி மாணாக்கருக்கு ஒதுக்கும்போது இதன் எண்ணிக்கை 443 ஆக உயரும். கொரோனா பேரிடர் காலத்தில் அரிசி, சீனி, பருப்பு, பாமாயில் ஆகிய அத்தியாவசியப் பொருட்கள் இலவசமாக 8 மாதம் வழங்கப்பட்டுள்ளது. ஏழைகளுக்காவே உழைத்த ஒப்பற்ற தலைவர்கள்எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா ஆசியுடன் தமிழகத்தில் அதிமுக., ஆட்சி மீண்டும் அமைய ஏப்ரல் அல்லது மே மாதத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் இரட்டை சிலை சின்னத்தில் வாக்களித்து , நலத்திட்டங்கள் தொடர துணை நிற்க வேண்டும். இவ்வாறு பேசினார்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image