நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் புத்தாண்டு முன்னிட்டு மல்லிகைப்பூ கிலோ 3000 ரூபாய்க்கு விற்பனை .

திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை தாலுகா என்றாலே நிலக்கோட்டை பூ மார்க்கெட் அனைவருக்கும் தெரியும் அளவுக்கு மிகவும் பிரபலமான பூமார்க்கெட் ஆகும். நிலக்கோட்டை பூ மார்க்கெட்டுக்கு நிலக்கோட்டை தாலுகா , உசிலம்பட்டி தாலுகா, ஆத்தூர் தாலுகா உள்ளிட்ட பகுதிகளில் இருந்து தினந்தோறும் பல டன் பூக்கள் விற்பனைக்கு கொண்டு வருவது விவசாயிகளின் வாடிக்கையாக கொண்டுள்ளார்கள்.      அவ்வாறு கொண்டுவரும் பூக்கள் நிலக்கோட்டை பூ மார்க்கெட்டில் இருந்து சென்னை, கோயம்புத்தூர், சேலம், கேரளா, பெங்களூர், மும்பை உள்ளிட்ட பல்வேறு நகரங்களுக்கு தினம்தோறும் பூக்கள் கொண்டு செல்லப்படுகிறது. இந்நிலையில் தற்போது பனிப்பொழிவு மற்றும் மழைப் பொழிவின் காரணமாக மல்லிகைப் பூக்களை பொருத்தவரை வரத்து மிகவும் குறைவாக இருக்கிறது.10 கிலோ பூக்க வேண்டிய இடத்தில் ஒரு கிலோ பூக்கள் மட்டுமே மல்லிகை பூ பூத்து வருவதாலும் அதேசமயம் நாளை மறுதினம் புத்தாண்டு வருவதால் ஒரு கிலோ மல்லிகை பூ கிலோ   3000 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையானது. இதேபோன்று மற்ற பூக்களுடன் கிலோவில் பின்வருமாறு: கலர் பிச்சி பூ 700 ரூபாய்க்கும், வெள்ளை பிச்சிப்பூ 900 ரூபாய்க்கும், அரளிப்பூ 150க்கும், சம்பங்கி 120க்கும், செவ்வந்திப்பூ மஞ்சள், ஊதா நிறம் பூக்கள் 150க்கும் , வெள்ள செவ்வந்திப்பூ 125க்கும், முல்லைப்பூ 1400 க்கும், கனகாம்பரம் பூ ரூபாய் 1500 க்கும் விற்பனையானது.     கடந்த இரண்டு நாட்களில் 4200 விற்பனை செய்த பூக்கள் திடீரென 3000 ரூபாய்க்கு விற்பனை செய்ததால் விவசாயிகள் மத்தியில் சற்று கவலையை ஏற்படுத்தியது.

நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா

புனித ரமலான் வாழ்த்துக்கள்..