
இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரையை சேர்ந்த, சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர். A.M.D.முஹம்மது சாலிஹ் ஹுசைன், ஜெ. அஸ்வின் ராஜ், சுல்தான் முகைதீன் ஆகியோர்களின் ”AMD LAW ASSOCIATES” புதிய வழக்கறிஞர் அலுவலகத்தின் திறப்பு விழா நிகழ்ச்சி, சென்னை மண்ணடியில் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக, தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் தலைவர். வழக்கறிஞர் P.S.அமல்ராஜ் அவர்கள், சென்னை உயர்நீதி மன்ற மூத்த வழக்கறிஞர் P.ஜார்ஜ் சுந்தரம் அவர்கள், தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்றக் கழகத்தின் மாநில பொதுச் செயலாளர், சென்னை காயிதே மில்லத் கல்லூரியின் தமிழ்த் துறை தலைவர் பேராசிரியர் முனைவர் ஜெ. ஹாஜா கனி (ஆரூர் புதியவன்), கீழக்கரை இஸ்லாமியா பள்ளிகளின் தாளாளர் முகைதீன் இபுறாகீம், சதக்கத்துன் ஜாரியா பள்ளி ஆசிரியை ஆபிதா பேகம், சமூக சேவகர், தீ.க.பட்டு ஊராட்சி தலைவர் ஜெ.டேவிட்சன், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் மாநில பொதுக் குழு உறுப்பினர், சென்னை உயர்நீதி மன்ற வழக்கறிஞர் துரை சந்திரசேகர் ஆகியோர்கள் கலந்து கொண்டு, புதிய வழக்கறிஞர் அலுவலகத்தினை திறந்து வைத்து விழாவினை சிறப்பித்தனர்.
இந்த வழக்கறிஞர் அலுவலக திறப்பு விழா நிகழ்ச்சிக்கு வருகை தந்த வழக்கறிஞர் பெருமக்கள் அனைவருக்கும் ”AMD LAW ASSOCIATES” சார்பாக நன்றி தெரிவிக்கப்பட்டது.