இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தூர்வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட மக்கள் பாதை சார்பாக கோரிக்கை: 

இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் அவர்கள் நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் தூர்வாரும் பணிகளை தொடங்க வேண்டுமென்று மக்கள் பாதை சார்பாக கோரிக்கை மனு கொடுக்கப்பட்டது.இராமநாதபுரம் மாவட்டம் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாய் தமிழகத்தின் இரண்டாவது பெரியகண்மாய். இராஜசிங்கமங்கலம் கண்மாயை சுற்றி இருக்கக்கூடிய அனைத்து கிராமங்களுக்கும் இந்த கண்மாய் தான் விவசாயம் மற்றும் முக்கிய நீர் ஆதாரமாக திகழ்கிறது. ஆனால் கண்மாயின் தற்போதைய நிலை சீமை கருவேல மரங்களாலும் , முறையான பராமரிப்பு இல்லாததாலும் தண்ணீரை சேமிக்க முடியாத சூழல் உருவாகி உள்ளது . இதனை கருத்தில் கொண்டு வருடத்திற்கு முன்பு  முதலமைச்சரின் தனிப்பிரிவிற்கு இணைய வழி கோரிக்கை இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன் சார்பாக அனுப்பப்பட்டது.முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கை மனுவில் நூருல் அமீன் கூறியதாவது:  கடுமையான குடிநீர் பஞ்சத்தை தீர்க்க மழை காலத்துக்குமுன் கண்மாயை தூர்வாரி நீர் தேக்க ஆதாரத்தை அதிகரிக்க செய்து தண்ணீர் தேவையை பூர்த்தி செய்யவேண்டுமென கோரிக்கை வைக்கப்பட்டுள்ளது. முதலமைச்சரின் தனிப்பிரிவு கோரிக்கை மனு ஏற்கப்பட்டு , சீரமைப்பு பணிக்கு மதிப்பீடுகள் தயாரிக்கப்பட்டு அரசின் ஒப்புதலுக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளது. மேலும்நடப்பாண்டு பொதுப்பணித்துறையின் மானியக்கோரிக்கையில் 110 விதியின்கீழ் கண்மாய் பராமரிப்பு பணிக்கு ரூ.19 கோடி மதிப்பீட்டில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. அரசாணை மற்றும் நிதி கிடைக்கப்பெற்றவுடன் பணிகள் மேற்கொள்ளப்படும் என்றதகவல் அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.தற்போது கண்மாயின் ஒரு சில பகுதிகளில் தூர்வாரும் பணிகள் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. ஆகையால் இராஜசிங்கமங்கலம் பெரிய கண்மாயை மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு போர்க்கால அடிப்படையில் பணிகளை தொடங்க வேண்டுமென்று மாவட்ட ஆட்சியரை நேரில் சந்தித்து இன்று மனு கொடுத்திருக்கிறோம்.தமிழக அரசு அறிவித்தபடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருந்தால், இராஜசிங்கமங்கலம் கண்மாயை விரைவில் தூர்வாரி நீர் தேக்கத்தை அதிகப்படுத்த வேண்டுகிறோம்.இராமநாதபுரம் மாவட்ட மக்கள் பாதை துணை ஒருங்கிணைப்பாளர் நூருல் அமீன், இராஜசிங்கமங்கலம் ஒன்றிய பொறுப்பாளர் ஆசிரியர் பாதுஷா ஆகியோர் மனுவை மாவட்ட ஆட்சியரிடம் கொடுத்தனர்.

Hala’s – சமையல் போட்டி..

Masala varieties available in the market from 2nd February 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image