ஊத்துக்குளி கிராமத்தில் நடைபெற்ற மருத்துவ முகாமை தொடங்கி வைத்து அரசு விழாவில் மாணிக்கம் எம்எல்ஏ திமுகவை விமர்சித்துப் பேசினார்

மதுரை மாவட்டம் சோழவந்தான் அருகே முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாமை தொடங்கி வைத்து திமுகவை விமர்சித்துப் பேசினார் மாணிக்கம் எம்எல்ஏ சோழவந்தான் அருகே தென்கரை ஊராட்சிக்குட்பட்ட ஊத்துக்குளி கிராமத்தில் முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் நடைபெற்றது முகாமிற்கு தென்கரை ஊராட்சி மன்றத்தலைவர் மஞ்சுளா ஐயப்பன் தலைமை தாங்கினார் ஊராட்சி ஒன்றிய பெருந்தலைவர் மகாலட்சுமி ராஜேஷ்கண்ணா மாவட்ட கவுன்சிலர் அகிலா ஜெயக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர் சுகாதார ஆய்வாளர்கள் வரவேற்றார் இதில் கலந்து கொண்ட மாணிக்கம் எம்எல்ஏ குத்துவிளக்கு ஏற்றி வைத்து முகாமை தொடங்கி வைத்தார் அப்போது அவர் பேசியதாவது அம்மா அரசு கிராமங்கள்தோறும் முதலமைச்சர் சிறப்பு மருத்துவ முகாம் நடத்தி வருகிறது இதில் கிராமத்தில் குழந்தைகள் பெண்கள் உள்பட அதிகம் பேர் பயன்பெற்று வருகின்றனர் 5 ஆண்டுகளில் 10,000 பேருக்கு மேல் முதியோர் பென்சன் திட்டம் வழங்கி வருகிறோம் ஆனால் ரயில்வே மேம்பாலம் மரு டெண்டர் விடப்பட்டு வேலைகள் தொடங்கி இரண்டு மாதத்தில் நிறைவு பெற்று பொதுமக்கள் பயன்பாட்டுக்கு வரும் முதலமைச்சர் மற்றும் துணை முதலமைச்சர் ஆகியோர் தமிழ்நாட்டில் 21 மினி கிளினிக தொடங்கி வைத்தனர் இதில் மூன்று மினி கிளினிக்கை சோழவந்தான் தொகுதிக்கு வழங்கியுள்ளனர் தற்போது திமுக கிராமங்களில் கிராம சபை என்ற பெயரில் அதிமுகவை அகற்றுவோம் என்று கூறிவருகின்றனர் நாங்கள் ஐந்தாண்டில் ஆற்றிய நலத்திட்டங்கள் கிராம மக்களுக்கு அதிக நிதி ஒதுக்கி பல்வேறு திட்டப் பணிகள் நிறைவேற்றப்பட்டுள்ளன திமுகவினர் பொய் பிரச்சாரமும் நாடகமும் பொது மக்களிடம் எடுபடாது மீண்டும் அம்மாவின் அதிமுக அரசு தொடர்ந்து பணியாற்றும் என்று கூறினார் இதில் வட்டார மருத்துவர் மனோஜ் பாண்டியன் டாக்டர்கள் அருண் கோபி ஹீரோ மகேஷ் கார்த்திகா ஹேமலதா வட்டார மருத்துவ மேற்பார்வையாளர் முனியசாமி ஒன்றிய கவுன்சிலர்கள் பஞ்சவர்ணம் ராமலிங்கம் கார்த்திகா ஞானசேகரன் தங்கப்பாண்டி ஆகியோர் அரசு நலத்திட்டங்களும் பொதுமக்கள் பயன்பாடுகள் பற்றியும் பேசினார்கள் சுகாதார ஆய்வாளர் பிரபாகரன் நன்றி கூறினார் இதில் பொதுக்குழு உறுப்பினர் நாகராஜன் நகரச் செயலாளர் கணேசன் கூட்டுறவு சங்க தலைவர் மலைச்சாமி என்ற செழியன் மேல மட்டையா ராமர் கச்சிராயர்ப்பு முனியாண்டி சோழவந்தான் 11-வார்டு முருகேசன் ராமச்சந்திரன் பட்டணம் நெய்னா முகமது ஊத்துக்குளி சண்முகம் தென்கரை திரவியம் உன்னுடைய மங்கலம் அம்மா பேரவை ராஜபாண்டி சோழவந்தான் நகர இளைஞரணி கேபிள் மணி அசோக் தியாகு சிலம்பு செல்வன் ஜூஸ் கடை கென்னடி பால்பண்ணை ராஜேந்திரன் சோழவந்தான் ராஜா உட்பட அதிமுகவினர் திரளாக கலந்து கொண்டனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image