பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் – அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பாக தமிழக அரசுக்கு கோரிக்கை

மதுரை அண்ணாநகர் பகுதியில் அனைத்து மறவர்கள் கூட்டமைப்பு சார்பாக பத்திரிக்கையாளர் சந்திப்பு தலைவர் சண்முக சாமி பொதுச்செயலாளர் சுப்பையா பொருளாளர் பாண்டி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது.தொடர்ந்து பத்திரிகையாளர்களுக்கு பேட்டியளித்த ஆலோசகர் விஜயகுமார் கூறுகையில்,மத்திய அரசின் சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சகம் அறிவுறுத்திய படி தமிழ்நாட்டில் சீர்மரபினர் நாடோடி மற்றும் அரை நாடோடி வகுப்பினரின் மக்கள் தொகை மற்றும் குடும்ப சமூக பொருளாதார நிலை அறிவு குறித்த புள்ளி விவரங்களை உடனே சேகரிப்பதற்கு உரிய நடவடிக்கையை தொடங்க வேண்டும்,குற்றப் பழங்குடியினர் சட்டம் 1911 ஆல் மிகவும் பாதிக்கப்பட்ட மறவர்களுக்கு மறுசீரமைப்பு வாரியம் அமைக்கப்பட வேண்டும்சீர்மரபு பழங்குடியினர் மக்களுக்கு மத்திய அரசு சார்ந்த பணிகளில் 10 சதவீதமும் தமிழக அரசு சார்ந்த பணிகளில் 20 சதவீதமும் தனி இட ஒதுக்கீடு வழங்க வேண்டும்மதுரை தேனி திண்டுக்கல் திருச்சி கோயம்புத்தூர் கன்னியாகுமரிஉட்பட இதர மாவட்டங்களில் உள்ள பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் என்று பட்டியலிடப்பட்ட அமர் அவர்கள் அனைவரும் சீர்மரபு பழங்குடியினர் என்று பட்டியலிட வேண்டும்பசும்பொன் முத்துராமலிங்கத்தேவர் அவர்களுக்கு பாரத ரத்னா விருது வழங்க தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண்டும்இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அங்கீகாரம் இல்லாமல் அமைக்கப்பட்டுள்ள ஒரு குறிப்பிட்ட சமூகத்தினரின் கூட்டமாக ஒருதலைபட்சமாக செயல்படும் தமிழ்நாடு பிற்படுத்தப்பட்ட வகுப்பினர் ஆணையம் உடனே கலைக்கப்பட வேண்டும்மேற்கூறிய எங்களோடு கோரிக்கைகளை உடனடியாக தமிழக அரசு நிறைவேற்ற வேண்டும் நிறைவேற்றாவிட்டால் மதுரை உட்பட தென் மாவட்டங்களில் பொங்கல் திருநாளுக்கு பிறகு மிகப்பெரிய ஆர்ப்பாட்டங்கள் போராட்டங்கள் நடத்தப்படும் என்று கூறினார்

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

புனித ரமலான் வாழ்த்துக்கள்..