
நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட கோட்டூர் ஊராட்சி அலுவலகத்தில் கிராம வளர்ச்சி குறித்து அனைத்துத் துறை அலுவலர்கள் கலந்து கொள்ளும் சிறப்பு ஊராட்சி மன்ற கூட்டம் ஊராட்சி மன்ற தலைவர் சுகந்தா கரிகால பாண்டியன் தலைமையில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கிராமத்தில் உள்ள அனைத்து கிராமங்களுக்கும் மருத்துவம், சுகாதாரம், குடிநீர் உள்ளிட்ட அடிப்படை பணிகள் சிறப்பாக கிடைக்கிறதா? என்பது குறித்து விவாதிக்கப்பட்டது.இக்கூட்டத்தில் துணை வட்டார வளர்ச்சி அலுவலர் புவனேஸ்வரி, கிராம நிர்வாக அலுவலர் சுமதி, சுகாதார ஆய்வாளர் முருகன், செயலாளர் பாண்டியராஜன், மற்றும் அனைத்து துறை அலுவலர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்
நிலக்கோட்டை செய்தியாளர் ம.ராஜா