டெல்லி -விவசாயிகளுக்கு ஆதரவு அளித்து திருநகரில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் மற்றும் சிஐடியு சார்பாக ஆர்ப்பாட்டம்

மத்திய அரசின் வேளாண்மை சட்டங்களை, கண்டித்து பல்வேறு மாநிலங்களில் இருந்து விவசாயிகள் டெல்லி சலோ என்கின்ற பெயரில் தலைநகர் டெல்லி நோக்கி பேரணி நடத்தி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவு தெரிவித்து.மதுரை மாவட்டம் திருப்பரங்குன்றம் தாலுகா திருநகர் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சிஐடியு மற்றும் விவசாயிகள் சங்கம் சார்பாக சாலை மறியல் மற்றும் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.ஆர்ப்பாட்டத்தில் மார்க்சிஸ்ட் புறநகர் மாவட்ட செயலாளர் சி.ராமகிருஷ்ணன், விவசாய சங்கத்தின் மதுரை மாவட்ட செயலாளர் கே.ராஜேந்திரன், சிபிஎம் புறநகர் மாவட்டச் செயலாளர்  கே.அரவிந்தன் ஆகியோர் உட்பட 30 க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.பின்னர் திருநகர் பகுதியில் உள்ள கனரா வங்கி முன்பாக அமர்ந்து தர்ணாவில் ஈடுபட முயன்றபொது காவல்துறையினரால் தடுத்து நிறுத்தப்பட்டனர். இதனால் அந்த பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் திரு நகர் காவல் ஆய்வாளர் திரு.சரவணன் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி அவர்களை கலைந்து கலைந்து செல்லுமாறு கேட்டுக் கொண்டதற்கிணங்க ஆர்ப்பாட்டக்காரர்கள் அமைதியாக கலைந்து சென்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image