உசிலம்பட்டியில் ஐந்து பைசாவிற்கு ஒரு கிலோ கோழி கறி

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியில் கடந்த நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டுவரும் பிராய்லர் கோழி இறைக்கடை நிறுவனம் உசிலம்பட்டி பேரையூர் ரோட்டில் புதிய கிளையை இன்று திறந்தது.இந்த கடையின் திறப்புவிழாவை முன்னிட்டு திறப்புவிழா சலுகையாக ஐந்து பைசாவிற்கு ஒருகிலோ கோழி கறி வழங்கப்படும் என போஸ்டர் அடித்து உசிலம்பட்டி முழுவதுமாக ஒட்டப்பட்ட நிலையில்இன்று திறப்புவிழாவின் போது நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் கோழிக்கறி வாங்க குவிந்தனர்.இதனால் உசிலம்பட்டி பேரையூர் சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்ட நிலையில் விரைந்து வந்த போலிசார் போக்குவரத்தையும், பொதுமக்கள் கூட்டத்தையும் கட்டுப்படுத்தினர்.பழைய நாணயங்களை பாதுகாக்கும் முயற்சியில் அறிவிக்கப்பட்ட இந்த சலுகையால் ஒரு சிலரிடம் மட்டுமே இந்த ஐந்து பைசா நாணயம் இருக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் நூற்றுக்கணக்கான மக்கள் ஐந்து பைசா நாணயத்துடன் குவிந்தது இன்னும் கிராம மக்கள் பழமை மாறாமல் உள்ளதை காட்டுவதாக கடையின் விற்பனையாளர்கள் தெரிவித்தனர்.

உசிலை சிந்தனியா

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image