மதுரையில் மைக்ரோ பைனான்ஸில்முதலீடு செய்வதாக கூறி 14 லட்சம் மோசடி 3 பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீஸ் விசாரணை

மதுரை மைக்ரோ பைனான்ஸில் முதலீடு செய்வதாக கூறி 14 லட்சம் மோசடி செய்ததாக 3 பெண்கள் உள்பட 4 பேரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.ராமேஸ்வரம் கல்லிமலை தெருவை சேர்ந்தவர் நாகேஸ்வரி .இவரிடம் மதுரை ஐயர் பங்களா உச்சபரம்பு மேடு காயத்திரி நகர் முதல் தெருவைச் சேர்ந்த பிரவீன் ராஜ் என்ற செந்தில் குமார் இவர் மைக்ரோ பைனான்ஸ் நடத்தி வருகிறார். இவரது பைனான்ஸில் முதலீடு செய்வதாக கூறி பிரவின்ராஜ் அவனியாபுரம் துளசிராம் 2-வது தெருவைச் சேர்ந்த முத்துலட்சுமி ராமேஸ்வரம் ராமர் தீர்த்தத்தைச் சேர்ந்த நம்புராணி, மண்டபம் ரயில்வே பீடர் ரோடு வைச்சேர்ந்த சிந்து ஆகியோர் நாகேஸ்வரியிடம் பல்வேறு கட்டங்களாக ரூபாய் 14 லட்சம் வசூலித்து உள்ளனர் .ஆனால் அவரது பணத்தை அவர் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக கூறப்படுகிறது .இதை தொடர்ந்துநாகேஸ்வரி தான் ஏமாற்றப்பட்டதாக தல்லாகுளம் போலீசில் புகார் செய்தார்.பைனான்ஸ் நிர்வாகி பிரவின்ராஜ் , முத்துலட்சுமி, நம் புராணி ,சிந்து ஆகிய 4 பேர் மீது போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

———————————————————————Hala’s – நோன்பு பெருநாள சமையல் போட்டி..

Last date 15th May 2021

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image