மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகளை கீழே தள்ளி 6 பவுன் செயின் பறிப்பு பைக் ஆசாமிகள் கைவரிசை……..

மதுரை அருகே இருசக்கர வாகனத்தில் சென்ற தாய் மகளை கீழே தள்ளி 6 பவுன் செயின் பறித்த பைக் ஆசாமிகளை போலீசார் தேடி வருகின்றனர்.சோழவந்தான் யோக நகரைச்சேர்ந்தவர் அமலிங்க நாகமணி 35 .இவரும் இவருடைய 10 வயது மகள் பிரான்சிஸ் ஜீவா இருவரும் இருசக்கர வாகனத்தில் சென்றனர் .அமலங்க நாகமணி வாகனத்தை ஓட்டிச் செல்ல பின்புறமாக மகள் அமர்ந்திருந்தார். அவர்கள் சோழவந்தான் மேலக்கால்ரோட்டில் சென்ற போது பின்னால் பைக்கில் வந்த 2 ஆசாமிகள் அவர்கள் இருவரையும் கீழே தள்ளி அமலிங்கநாகமணி அணிந்திருந்த 6 பவுன் சங்கிலியை பறித்து சென்று விட்டனர். கீழே விழுந்ததில் இருவரும் படுகாயம் அடைந்தனர். இந்த சம்பவம் தொடர்பாக அமலிங்க நாகமணி சோழவந்தான் போலீசில் புகார் செய்தார். போலீசார் வழக்குப்பதிவு செய்து பைக் ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

செய்தியாளர் வி காளமேகம் மதுரை மாவட்டம்

All Your Home Needs @ One Place

All Your Home Needs @ One Place

———————————————————————-To Download Keelainews Android Application – Click on the Image